சுய தொழில் துவங்க விரும்பும் பெண்களுக்கு

Women working in her own  flower shop

 

நிறைய பெண்கள் தொழில் நுட்ப படிப்பு முடித்து விட்டு, வேலைக்கு போய் சிரம பட முடியாமல் வீட்டிலே தங்கி விடுகிறார்கள். அவர்களுடைய திறமைகள் அவர்களுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. திறமை இருந்தும், பெற்றவர்கள், சகோதரர்கள் மற்றும் கணவனை சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தன் சொந்த தொழில் செய்து அவர்கள் சுயசாற்புடன் வாழ அரசு ஒரு சில திட்டங்கள் வகுத்து வருகிறது. அதில் ஒன்று தான் .

NEEDS Scheme – New Entrepreneur cum Enterprise Development Scheme

இதன் மூலம் பெரிய லட்சியங்களை அடையலாம். உங்கள் கனவுகளை மெய்ப்பித்து  கொள்ளலாம்.

சிறிய அறிமுகம்

படித்து விட்டு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தங்களின் திறமையை வெளிக்கொணரும் ஒரு வாய்ப்பு. இதில் பெண்களுக்கு மட்டும் முன்னுரிமை உண்டு, எந்த வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும்.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (NEEDS) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் வேண்டும்,  அப்படி என்றால் அவர்கள் பெற்றவர்கள் அல்லது கணவர் சுய தொழிலில் ஈடுபட்டு இருக்க கூடாது.

கல்வி தகுதி – பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / ஐடிஐ / அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழில்சார் பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும். பெண்களுக்கு வயது உச்ச வரம்பு 45 years.

வழிமுறைகள்

  • முதலில் தங்கள் எந்த தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக  பாக்குமட்டை தட்டு தயாரிப்பு, பிரின்டிங், தையல், வீவிங், பேக்கரி, ஸ்பா,ஜிம் , கம்ப்யூட்டர் சென்டர், நான் ஒவென் போன்ற எந்த தொழிலாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
  • அடுத்து இயந்திரங்கள் எதுவெல்லாம் தேவை என்பதை பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.
  • அடுத்து நீங்கள் துவங்க இருக்கும் தொழிலுடைய ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்.
  • அடுத்து உங்களுக்கு தொழில் செய்ய கடன் உதவி கேட்டு உங்கள் வங்கிஇடம்  அணுகவும்.
  • வங்கி எந்த வித அடமானம் இன்றி CREDIT GUARANTEE FUND TRUST FOR MICRO AND SMALL ENTERPRISES மூலம் கடன் வழங்குகிறார்கள்.
  • இதில் நீங்கள் 1 லட்சம் முதல் 5 கோடி வரை கடனுதவி பெறலாம். இதில் 1 லட்சம் முதல் 1 கோடி வரை 30%  மானியம் பெறலாம். அதற்கு மேற்பட்ட கடனுக்கு 30 லட்சம் மட்டுமே மானியம் கிடைக்கும்.
  • இந்த வகை மானியம் front end subsidy எனப்படும். இது உங்களுக்கு கடனுதவி வங்கியில் கிடைத்தவுடன், உங்களுக்கு மானியம் 3 தவணைகளில் முதலிலேயே கிடைத்து விடுவதால் உங்கள் கடன் சுமை ஆரம்பத்திலேயே குறைக்கப்படும். உங்கள் மானியத்தை உங்கள் கடன் தொகையில் கழித்து கொள்ளலாம்.
  • மேலும் வட்டி மானியம் 3 % மூன்று மாதத்துக்கு ஒருமுறை வங்கியில் கிடைக்க பெறும்.
  • நீங்கள் உங்கள் மாவட்ட தொழில் மையத்தையும் தொடர்பு  கொள்ளலாம்.
  • நீங்கள் உங்கள் விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பார்கவும்.

msmeonline.tn.gov.in

Dont be miss fortune always be Mrs.fortunate

 

– Saikrishna

 

Back To Top