சட்டம் அறிவோம்

Wooden toy family and judge mallet. family divorce concept Premium Photo

போக்சோ சட்டம்( POCSO ACT) 

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டமாகும்..குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு  கொண்டுவரப்பட்டதே போக்சோ சட்டம்.

சட்ட விதிமுறைகள்

இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் பதியப்படும் வழக்குகளை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். வெளிப்படையாக வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் எதிர்காலம் கருதி ரகசியமாக விசாரணை நடைபெறும்.

புகார் பெற்று FIR போடுவதற்கு முன்பாகவே காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தையை அதன் இருப்பிடத்திலியே காவல்துறை விசாரணை செய்ய வேண்டும். காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யக்கூடாது. இதை மீறும் காவலர்கள் மீது வழக்கு பதியவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.குழந்தையிடம் நீதிமன்றம் ரகசிய வாக்குமூலம் வாங்க வேண்டும்.

தண்டனை விவரம்

இச்சட்டத்தின் கீழ் குற்றவாளிக்கு அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வரை (அ) ஆயுள் தண்டனை வழங்க முடியும்..2019 ஆண்டு ஏப்ரல் மாதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான  போக்சோ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.


ஆர்த்தி பாஸ்கரன்
வழக்குரைஞர்
Back To Top