மனித உறவுகள் இங்கே ஆயிரம் ஒவ்வொரு உயிரும் படைக்க படும் போது அதற்கேற்ற உடல் அமைப்புடனும் குணாதிசயங்களோடும் படைக்க படுகிறது, அப்படி படைக்கப்படும் மனிதன் ஆணாக இருந்து தன்னுள் பெண் தன்மையை உணரும் போது தன் பாலினத்தை பெண்ணாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்.
இவ்வாறு ஆணில் இருந்து பெண்ணாக மாறியவரை திருநங்கையாக இச்சமூகம் பல போராட்டங்களுக்கு பிறகு ஏற்றுக்கொண்டுள்ளது, இருப்பினும் ஒரு பெண்ணாக ஏற்கும் காலம் வரவில்லை. திருநங்கைகளைப் பற்றி இன்றைய சமூகம் நிறையவே அறிந்து உள்ளது. திருநங்கைகளுக்கு என்று தனி அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன, ஆனால் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மக்களை நாம் அறிவோமா? அதுவே திருநம்பிகளின் உலகம். “திருநம்பி” என்றே சொல்லே இன்றும் பலருக்கு தெரியாது.
அவர்களின் சுய தன்மையே அவர்களை அவ்வாரிருக்க தூண்டுக்கிறது. பெரும்பாலான திருநம்பிகள், சமூகத்தின் ஆண்-பெண் என்ற கோட்பாட்டு அழுத்தத்தின் காரணமாக, பெரும்பாலும் சமூக ஏச்சுக்களுக்கு பயந்து தங்களை வெளிப்படுத்தாமல் பெண்மையின் போர்வையில் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கலாம். திருநங்கையாக திருநம்பியாக இருப்பது அவர்களின் குறையும் இல்லை இந்த சமூகமே இந்த மாற்றத்தை ஏற்று கொள்ள பழகி கொள்ள வேண்டும்.
தான் உணர்ந்த ஆண் தன்மையுடன், தன் விருப்பப்படி சுயமாக வாழ இந்த சமூகம் அவர்களுக்கு எவ்வளவு துணை புரிகிறது, சக மனிதர்களாக அவர்களுக்கு ஆதரவு அளிக்க நம்முடைய பங்கு என்ன என்பதை இனிவரும் கட்டுரைகளில் பார்க்கலாம்.
ஆக்கம்
சோழன்