‘HCL-ன் தலைமை பொறுப்பை ஏற்கிறார், ரோஷினி நாடார் மல்ஹோத்ரா’ என்ற செய்திக்கு வந்த பெரும்பாலான பின்னூட்டங்கள் அவரின் பெயருக்கு பின்னால் உள்ள இரு வேறு குடும்பப்பெயர்களை சுட்டிக்காட்டியே வருகின்றன. வருடத்திற்கு சுமார் 71 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும், ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் 43 ஆண்டு கால வரலாற்றின் முதன் பெண் தலைமை, இந்திய தகவல் தொழில்நுட்ப உலகின் 3-ம் பெண் தலைமை என்பதைத் தாண்டி, இந்த (இணைய) உலகிற்கு அவரது குடும்ப பெயரே முன் நிற்பது அபத்தமா? அறிவின்மையா? என்பது புரியாத புதிர். 1976-ல் ஷிவ் நாடாரால் 6 பொறியாளர்களால் தொடங்கப்பட்டது HCL சாம்ராஜியம், இன்று 1.5 லட்சம் பணியாளர்களுடன் 44 நாடுகளில்,...