ஓ மனமே..ஓ மனமே…

texture background heart free photo
“கௌதம்.. கௌதம்..நீங்க வந்து அரை மணி நேரம் ஆகுது.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசல.. இந்த மாசத்துல இது மூணாவது செஷன் ஆனா நீங்க இன்னும் வாயே திறக்கல.. நீங்க வாய திறந்து ஏதாவது சொன்னா தான் என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்!”, என்று சொன்ன சைக்கியாட்ரிஸ்ட்- சித்ரா ரவிக்குமாருக்கு கௌதமிடமிருந்து ஒரு பெருமூச்சு தான் பதிலாகக் கிடைத்தது. அந்த குளிரூட்டப்பட்ட அறையில், டேபிளின்  முன்பாக  சாய்ந்து அமர்வதற்கு ஏதுவாக இருந்த  ஒரு சேரின் இரு பக்கத்து பிடிகளையும் அழுத்திப் பிடித்தவாறு அமர்ந்திருந்தான் கௌதம்-பிரபல தமிழ் பட இயக்குனர். தலையை மேல் நோக்கி சாய்த்து ஃபேனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தார் டாக்டர்  சித்ரா.
“ஆயம் ஹியர் டு ஹெல்ப் யூ கௌதம்.. ப்ளீஸ் ஓபன் அப்.. உள்ள இருக்குறத வெளியில கொட்டிட்டாலே  பாதி பிராப்ளம் சால்வான  மாதிரி..”, என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறினார் அவர். ஒரு பெருமூச்சோடு,” என்ன சொல்றதுன்னு தெரியல டாக்டர்.. ஐ அம் கன்ஃப்யூஸ்டு.. நான் உள்ளுக்குள்ள நிறைய பேசிட்டு தான் இருக்கேன்.. ஆனா வெளியில சொல்லனும்னா, என்னால முடியல..”, என்று குழப்பமாக பதில் கூறினான் கௌதம் .”உள்ளுக்குள்ள அப்படி என்ன எல்லாம் பேசறீங்க?”, என்று கேட்டார் டாக்டர் .”என் வாழ்க்கை.. என் லைப் ஸ்டோரி.. அதை பத்தி தான்.”, என்றான் அவன். “எனக்கும் சொல்லுங்களேன்.. உங்க லைப் ஸ்டோரி .. ஐ நோ யு ஆர் அன் ஆசம் ஸ்டோரி டெல்லர்.. உங்க மூவிஸ் எனக்கு அவ்ளோ பிடிக்கும்”, என்றார் சித்ரா ஒருசிறு சிரிப்போடு.”இப் யூ நோ தட் மச் அபவுட் மி, உங்களுக்கு என் முதல் காதல் பத்தியும் தெரிஞ்சிருக்கும் தானே?”, என்றான் அவன்  கேள்வியாக.
 “யூ மீன் ஜெனி?அது உங்களை தெரிஞ்ச எல்லாருக்குமே தெரியுமே..”, என்றார் சகஜமாக. “ஜெனி என் லைப்ப விட்டு போன அப்புறம்..  நான் உண்டு.. என் வேலை உண்டுன்னு இருந்தேன்.. நல்ல மூவிஸ், நிறைய ஃபேன்ஸ் னு ஒரு சக்ஸஸ்புள் கரியர் பாத் அமைஞ்சது.. ஐ ஷுட் தேங்க் ஜெனி ஃபார் தட் .. கல்யாணமே வேண்டாம்னு கொஞ்ச காலம்.. அப்புறம் அப்பா ,அம்மா  ஃபோர்ஸ் பண்ணதால  மேட்ரிமோனியில் ப்ரொபைல்ஸ் பார்க்க ஆரம்பிச்சப்பதான், திவ்யாவை மீட் பண்ணேன்!”, என்று சொல்லி நிறுத்தினான் அவன்.” திவ்யா.. உங்க வைஃப் தானே?”, என்று கேட்டார் டாக்டர். “எஸ்!மை பிலவுட் வைஃப்.. மை லைஃப்.. அவளா வந்தா.. காதலோட, புரிதலோட..ஒரு அழகான வாழ்க்கைக்கான தொடக்கத்தோட.. மீட் பண்ண ஒன் மண்த்ல எங்க மேரேஜ் ரொம்ப சிம்பிளா, நிறைவா நடந்தது. லைஃப்போட  ரொம்ப பியூட்டிஃபுல் ஆன பக்கத்தை பார்க்க ஆரம்பிச்ச நேரம் அது.
*****
கௌதம்-திவ்யா திருமணமான புதிதில்,
“கௌதம்.. இப்ப கெளம்ப போறீங்களா இல்லையா? நீங்க எப்பவும் பங்ச்சுவலா  இருக்க ஆளு.. இப்போ இப்படி டெய்லி லேட்டா போனா ,என்ன தான் எல்லாரும் தப்பா நினைப்பாங்க!”, என்று செல்லமாக கோபித்த தன் மனைவி திவ்யாவின் பின்னால் இருந்து அவளை இறுக அணைத்தபடி,” நினைச்சா. நினைச்சுக்கிட்டும் ..அது எப்படி அப்படி நினைப்பாங்க? எல்லாருக்கும் புரியும்!”,என்றான் அவன். “என்ன புரியும்?”,என்று கேட்டவளை முன்னுக்கு திருப்பி, அருகில் இழுத்து, அவள் மூக்கோடு மூக்கை உரசி, “எனக்கு வீட்டுல நிறைய வேலை இருக்கும்னு ..சோ லேட் ஆ  போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க”,என்று கண்ணடித்தபடி அவன் குறும்பாக கூற,சட்டென்று அவனை விலக்கி, குடுகுடுவென ஓடி ரூம் கதவை சாத்தி தாழிட்டு கொண்டாள்,உள்ளிருந்த படியே, “இப்போ ஒழுங்கா ஷூட்டிங் கெளம்புங்க.. நைட் சீக்கிரமா வாங்க!”,என்றாள் சிரித்தபடி. கதவருகில் வந்து, அதில் சாய்ந்தபடி,”எதுக்கு நைட் சீக்கிரமா வரணும் மேடம்?”, என்று அவன் குறும்பாக கேட்க,”ம்ம்.. டைம் ஓட தூங்கணும்  இல்ல.. அதுக்கு தான்!”,என்றாள் கிண்டலாக. “உன்ன ..இரு போயிட்டு வந்து ,நைட் வச்சுக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பி போனான் அவன்.
*****
இன்று , டாக்டர் சித்ராவின் அறையில்,
“ஒருநாள் போல சீக்கிரமா வீட்டுக்கு வந்ததில்ல நா.. ஆனா அவளும் ஒரு நாள் கூட என்ன  திட்டவோ..ஏன் இப்படி தினமும் லேட்டா வரீங்கன்னு கேள்வி கேட்கவோ செஞ்சதில்ல.. அவ்ளோ அண்டர்ஸ்டாண்டிங் ஆன பொண்ணு அவ!, என்று சொல்லி நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்தான், ” 1 அண்ட் ½ யியர்ஸ் எப்படி போச்சுன்னு தெரியாது.. அவ்வளவு பாஸ்டா.. பெஸ்டா போச்சு..பட்…!”,  என்று நிறுத்திய அவனை பார்த்து,”பட்.. வாட் ஹேப்பெண்ட் கௌதம்?”, என்றாள் சித்ரா. “லைஃப் இஸ் ஃபுள் ஆஃ சர்பிரைசஸ்! ஆனா எல்லா சர்ப்ரைஸ்ஸும் சந்தோஷத்த கொடுக்கிறதில்ல..”,என்றான் அவன்.
புரியாதவளாக,” 1 அண்ட் ½ யியர்ஸ்கு  அப்புறம் உங்க சந்தோஷம் கெடுற  மாதிரி என்ன நடந்தது கௌதம்? இஸ் தட் சாம்திங் ரிலேடட் டு யுவர் பாஸ்ட்  ரெலேஷன்ஷிப்?”,என்று கேட்டார் சித்ரா.”யூ மீன் ஜெனி? நோ.. நோ..ஜெனி இப்பவும் என் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமான ஆளு ..இது திவ்யாவுக்கும் நல்லாத் தெரியும்.. சோ அதனால எங்களுக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்ல..”, என்று இவன் கூற.”தென்?”, என்று கேட்டார் அவர். “கல்யாணமாகி 1 யியர்க்கு  அப்புறம், எங்களுக்கு ஒரு பெண் குழந்த பிறந்தது-வெண்பா! எங்க  வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சது ..அடுத்த ஆறுமாசம் அவ்ளோ சந்தோஷமா.. நிறைவா போச்சு..பட், ஒரு நாள் எல்லாமே தலைகீழா மாறிடுச்சு!”, என்று சொல்லிவிட்டு மீண்டும் பின்நோக்கி யோசித்தபடி பேச ஆரம்பித்தான் அவன்.
*****
8 மாதங்களுக்கு முன்பு,
அன்று ஷூட்டிங் முடித்துவிட்டு, நைட் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தவனிடம் சென்று,”கௌதம்.. டெய்லி ஏன் லேட்டா வர்றீங்க? நீங்க வருவீங்க.. உங்க கூட விளையாடனுமின்னு பாப்பா எவ்வளவு நேரம் வெயிட் பண்ண தெரியுமா? ½ அன் அவர்க்கு முன்னாடி தான் தூங்கினா ..”,என்றாள் கோபமாக. “திவ்யா ..ஷூட் முடிய லேட் ஆகிருச்சு ..என்ன என்ன பண்ண சொல்ற?”, இது அவன். “இவ்ளோ கேஷுவலா சொல்றீங்க.. இந்த பாஸ்ட் 1 மண்த்தா  டெய்லி லேட்.. குழந்தையோட ஒரு நாள் டைம் ஸ்பென்ட் பண்ணேனு  சொல்லுங்க பாப்போம்.. நல்லாதானே இருந்தீங்க.. இப்போ ஏன் திடீர்னு குழந்தைகிட்ட  இவ்ளோ வெறுப்ப காட்டுறீங்க?”, என்றாள் அவள்.
“பைத்தியம் மாதிரி பேசாத திவ்யா.. நான் யார் மேலயும் வெறுப்ப காட்டல..எனக்கு வொர்க் பிரஷர்.. தட்ஸ் இட் ..ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட்..!”, என்றான் இவன்.” நீங்க சுத்தமா மாறிட்டீங்க கௌதம்..”, என்று கூறிவிட்டு ரூமுக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள் திவ்யா. மற்றொரு நாள் ஷூட்டிங் புறப்பட்டுக் கொண்டிருந்த கௌதமிடம், வெண்பாவிற்கு சாப்பாடு ஊட்டி கொண்டே,” கௌதம்.. நாம  ஜிஆர்டி வரைக்கும் போலாமா?”, என்று கேட்டாள் திவ்யா.” ஜிஆர்டி? உனக்கு ஏதாவது வாங்கணுமா?”, என்று கேட்டான் இவன்.” இல்ல.. பாப்பாக்கு ஒரு கோல்ட் சைனும்,   கொலுசும் வாங்கணும்.. அதான்..”, என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னரே “இன்னைக்கு முடியாது திவ்யா ..இன்னொரு நாள் பாத்துக்கலாம் ..”,என்றான் அவசரமாக.
“நீங்க இப்படி தான் ஏதாவது சொல்லுவீங்கன்னு எதிர்எதிர்பார்த்தேன்தான்.. உங்களுக்கு ஏன் குழந்தை மேல இவ்வளவு வெறுப்பு ?”,என்று கேட்டவளை ஒரு நிமிடம் ஊடுருவிப் பார்த்து விட்டு,” அப்படி எல்லாம் இல்ல திவ்யா..”, என்று இவன் ஏதோ சொல்லும் முன்பே,” எனாஃப் கௌதம்!”, என்று விட்டு குழந்தையை தூக்கிக்கொண்டு விருட்டென்று உள்ளே போய் விட்டாள் திவ்யா. நடக்கும் அனைத்தையும் கௌதமின் தாய் ஒரு மூலையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் வேதனையுடன்.
*****
 இன்று, டாக்டர் சித்ராவின் அறையில்,
“இப்படி ஒரு நாள் பார்த்த மாதிரி இல்லாம ,தினமும் சண்ட”, என்றான் கௌதம்.”கௌதம்.. திவ்யா சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு இல்ல.. ஐ டோன்ட் பைன்ட் இட் ராங்..  6 மண்த்ஸ் குழந்தைய ரொம்ப நேசித்த நீங்க, திடீர்னு ஏன் மாறினீங்க?”, என்று கேட்டார் டாக்டர் சித்ரா.”மாறல டாக்டர்..  வெண்பா எங்க ரெண்டு பேருக்கும் உயிர் ..அவ சிரிப்பு அழுகைனு எல்லாமே எங்க  வாழ்க்கைய ரொம்ப அழகா ஆக்குச்சி.. ஆனா என்னைக்கு ஒரு எதிர்பாராத சம்பவத்தால, அவளை பறிகொடுத்தோமோ.. அன்னைக்கே எங்க லைஃப் டெரிபிலா ஆகிடுச்சு..”, என்று சொல்லி நிறுத்தியவனை அதிர்ச்சியாக பார்த்துவிட்டு, “கௌதம் ..அப்போ திவ்யா, இப்ப வரைக்கும் எப்ப பார்த்தாலும்  உங்க கிட்ட குழந்தைக்காக சண்டை போடறதா சொன்னதெல்லாம்..?”, என்று கேட்டவரிடம், “குழந்தை இறந்த அதிர்ச்சியில திவ்யா மூனு  நாள் பேசல..  தூங்கல.. அழக் கூட இல்ல.. அப்புறம் ஒரு ரெண்டு நாள் நல்லா தூங்கினா.. தூங்கி எழுந்ததில இருந்து, குழந்தை இறந்தது தெரியாத மாதிரியே நடக்க ஆரம்பிச்சா.. நானும் சரி கொஞ்ச நாள்ல சரியாயிடும்னு விட்டுட்டேன்.. ஆனா மாசக் கணக்கா, இல்லாத குழந்தைக்கு சாப்பாடு ஊட்றது,  குளிக்க வைக்கிறதுனு  சகலமும் செய்வா.. அப்போதான் அவளுக்கு ஏதோ பிரச்சினை இருக்குனு புரிய ஆரம்பிச்சது.
ஆனா டாக்டர்கிட்ட கூப்பிட்டா அவ கஷ்டப்படுவா.. அவளை கஷ்டப் படுத்த எனக்கு இஷ்டமில்லை”, என்ற அவனிடம், “சோ..இப்ப வரைக்கும் திவ்யா அப்படித்தான் இருக்காங்களா?”, என்று டாக்டர் கேட்க,”எஸ்..!”, என்றான் சோகமாக. “என்னாலயும் ஒரு பாயிண்ட் க்கு மேல முடியல..டிப்ரஷன்.. ஐ டோன்ட் வான்ட் டு ஸ்பாயில் ஹர் ஹேப்பினஸ்.. அது கற்பனையாக இருந்தாலும்..”, என்று சொல்லி முடித்தான் கௌதம். ஒரு நிமிட அமைதிக்குப்பின், மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்சைப் திருப்பி நேரத்தை பார்த்துவிட்டு,” இந்த செஷனுக்கு இவ்வளவு போதும் கௌதம்.. அப்புறம் பேசலாம்..”, என்றார் டாக்டர் சித்ரா.” தேங்க்ஸ் டாக்டர்.. பார் லிஸ்டெனிங் டூ  மீ..”, என்று விட்டு அங்கிருந்து கிளம்பினான் கௌதம்.அவன் வெளியில் சென்று கதவு மூடப்பட்டதும்,உள் அறையில் இருந்து வெளியில் வந்தாள் திவ்யா. அவள் முகம் அதிர்ச்சியில் உறைந்து இருந்தது.
“கம் திவ்யா..சிட் ஹியர்..” என்ற டாக்டர் சித்ரா, திவ்யாவின் நெருங்கிய தோழி. “என்ன நடக்குது சித்ரா இங்கே..?”, என்றாள் திவ்யா புரியாமல், மேலும் தொடர்ந்தாள், “குழந்தை எங்கள விட்டு போனதுக்கு அப்புறம் நான் கௌதம இப்பதான் பாக்குறேன்..கௌதம் வொர்க்கஹாலிக்.. நா மட்டும் இருந்தப்ப நா அதப் பெரிசா கண்டுக்கல.. ஆனா குழந்தை வந்த பிறகும், அதே மாதிரி அப்ஸெஸ்டா  ஓடிட்டு இருந்தது எனக்கு பிடிக்கல.. அப்பப்போ சின்னச் சின்ன சண்டையும்.. சச்சரவும் போயிட்டு இருந்தது. ஆனாலும் நாங்க ரொம்ப ஹாப்பியா தான் இருந்தோம்.. ஒரு நாள் குழந்தை வெண்பாக்கு ஃபிட்ஸ் வித் ஹை பிவர் ..ஹெவி ரெயின் வேற..கௌதமுக்கு போன் பண்ணா எடுக்கவே இல்ல.. ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால கால கவனிக்கல.. கடைசில நானா கேப்  புக் பண்ணி, கிளம்பி ஹாஸ்பிடல் போறதுக்குள்ள..இட் வாஸ் டூ லேட்..”, என்று கண்ணீர் வழிய கூறினாள் திவ்யா.
“எனக்கு கௌதம் மேல அவ்ளோ கோபம்.. குழந்தை இறந்ததுக்கு அவரோட அலட்சியம்தான் காரணம்னு  எனக்கு தோணுச்சு.. சோ ..நான் கெளம்பி என்  அம்மா வீட்டுக்கு போயிட்டேன்.. வெளி உலகத்தோட எந்த தொடர்பும் இல்லாம..நடந்த எதையும் மறக்கவும் முடியாம..இப்ப வரைக்கும் தவிச்சிட்டு தான் இருக்கேன்.. நீ போன் பண்ணி உடனே வரச் சொன்னபோ, ஐ நெவர் எக்ஸ்பெக்டட் திஸ் !”,என்றாள் திவ்யா அதிர்ச்சி தீராமலே. “எஸ் திவ்யா..ஐ அண்டர்ஸ்டாண்ட்.. குழந்தயோட இறப்புக்கு பிறகு நீ உங்க அம்மா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம், கௌதமால குழந்தையோட பிரிவையும், உன்னோட பிரிவையும் ஏத்துக்க முடியல.. அதனால, நீ குழந்தை இறந்தத ஒத்துக்காம, கற்பனையா அந்தக் குழந்த இருக்கிறதா நெனச்சுக்கிட்டு,அவர் கூடவே வாழ்றதா, அவர் கற்பனை பண்ணி வாழ ஆரம்பிச்சி  இருக்காரு.. ஒருவிதமான மோட்டிவேடட்  டெல்யூஷன்னு சொல்வோம்.. கௌதம் அடிக்கடி தனியா பேசறத பார்த்துட்டு, அவங்க அம்மா தான் அவரை இங்க கூட்டிட்டு வந்தாங்க.. அவர் இங்க வர ஆரம்பிச்ச  நாளிலிருந்தே,  நான் உன்ன காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணேன்..ஆனா உன் நம்பர் எதுவுமே எனக்கு கிடைக்கல.. கடைசியா உங்க அம்மா நம்பர் வாங்கி ,உன்ன  ரீச்  பண்றதுக்கு இவ்ளோ நாள் ஆகி இருக்கு..”, என்றார் டாக்டர் சித்ரா.
“இப்போ என்ன பண்றது?”, என்றாள் திவ்யா பாவமாக. “நீ தான் சொல்லணும்!”, என்றார் டாக்டர் சித்ரா. சிறிது நேரம் யோசித்துவிட்டு,” நான் கிளம்புறேன்.”, என்றாள் திவ்யா. “எங்க?”, என்று சித்ரா கேட்க,” என் வீட்டுக்கு தான்..”, என்றவளை குழப்பமாக நோக்கியபடி சித்ரா எழ, “ஐ மீன்.. கௌதம்-என்னோட வீட்டுக்கு, அந்த சூழ்நிலையில நான் அவர விட்டுட்டு போயிருக்க கூடாது..ஐ காண்ட் ஸீ  ஹிம் லைக் திஸ்.. கொஞ்ச நாள்ள கோபம் போனதுக்கப்புறம், மறுபடி வந்துடலாம்னு தான் போனேன்.. ஆனா இப்படி எல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கல.. இப்ப மறுபடி அவர நான்தான் பழைய மாதிரி ஆக்கணும் ..அவர் கற்பனையில இருக்கிற பொய்கள நான் உண்மையாக்கப் போறேன்..”, என்று சொன்னவளை இறுக அணைத்தபடி,” ஆல் த பெஸ்ட் டியர் “, என்றாள் சித்ரா .”தேங்க்யூ சோ மச்!”, என்று விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றாள் திவ்யா.
*****
 மூன்று மாதங்களுக்குப் பிறகு,
டாக்டர் சித்ராவின் போன் ரிங்டோன் ஒலித்தது.எடுத்து காதில் வைத்தார், மறுமுனையில் கௌதம்,” ஹலோ!டாக்டர் சித்ரா..? நான் கவுதம்..”, என்றால். “ஹாய் கௌதம்.. என்ன ஆச்சு? 3 மண்த்ஸா செஷனுக்கு வரல.. கால் பண்ணாலும் ரெஸ்பான்ஸ் இல்ல..”, என்று கேட்டார் சித்ரா. “செஷன்ஸ்? அதுக்கு அவசியமே இல்ல டாக்டர் ,ஐ ஹவ் அ குட் நியூஸ்.. “வி ஆர் பிரெக்ணட் ” அகைன்.. திவ்யா கிட்ட நல்ல சேஞ்ஜஸ் தெரியுது.. முன்ன மாதிரி இல்லாம, வெண்பா இப்போ வயித்துக்குள்ள இருக்கா அப்படின்னு முழுமையா நம்பரா.. எங்களோட வெண்பாவோட  சேத்து ,எங்க வாழ்க்கையும் எங்களுக்கு மறுபடி கிடைச்சிருக்கு..”, என்று குதூகலமாக அவன் சொல்லி முடிக்க, “ஆல் த பெஸ்ட் கௌதம்.. இனி எல்லாமே நல்லதாவே  நடக்கும்..”, என்று சொல்லி போனை அணைத்து விட்டு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்  திவ்யாவின் தோழியான டாக்டர்  சித்ரா.
image credit: needpix.com

எழுத்து-ப்ரியா பாலசுப்பிரமணியன்
Back To Top