என்னுடன் நான் – ஒரு பயணம்!!

சுதந்திரம் வாங்கி விட்டீர்களா ? அட 1947′ இல் நம் முன்னோர்கள் நாட்டிற்காக வாங்கிய சுதந்திரத்தை பற்றி கேட்கவில்லை உங்களுக்கான சுய சுதந்திரத்தைப் பற்றி கேட்கிறேன். உங்களால் ஒரு கருத்தையோ ஒரு உடையையோ ஒரு முடிவையோ அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல் எனக்கு பிடித்திருக்கிறது நான் செய்கிறேன் என்று எடுக்க முடிந்தால்  நீங்கள் உங்கள் சுதந்திரத்தை பெற்றாகிவிட்டீர்கள். உங்கள் ஆசைகளை , கனவுகளை உங்கள் லட்சியங்களை நோக்கி பயணிக்க வயது, திருமணம் ,வாழ்க்கை முறை எப்பொழுதும் ஒரு தடை இல்லை .
நாம் நம் சுதந்திரத்தை தொலைத்து விடுவது மட்டுமல்லாமல் நமது சுற்றத்தாரையும் அந்த வளையத்திற்குள் கொண்டு வர நினைக்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மை !!
தனிமையில் யோசியுங்கள் நான் எப்படிப் பட்டவர்? என் ஆசைகள் என்ன நான் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன் அந்த ஓட்டத்தில் எனது சுதந்திரம் பறி போனதா இல்லையா?? சுய உணர்தலில் நான் எந்த நிலையில் உள்ளேன் என்பதற்கான கேள்விகளுக்கு விடை பெறும்போது உணர்வீர்கள் நான் கூறிய சுதந்திரத்தை !!
காதல் கொள்ளுங்கள் உங்கள் மீது நீங்களே மரணம் நேரும்  நேரம் யாரும் அறியாத ஒன்று ஆனால் அப்படி மரணிக்கும் பொழுது என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்ந்து முடித்தேன்  என்பது மிகவும் முக்கியமான ஒன்று ..
நம் வாழ்க்கையில் நாம் இருக்கும் நிலைமைக்கு காரணம் நாமே அது நல்லது கெட்டது இரண்டிற்கும் பொருந்தும் உங்கள் முடிவுகளை பிறரிடம் ஆலோசித்த பின் நீங்களே எடுங்கள் என் சுதந்திரம் என் கையில். நீங்கள் எப்படி? ?என்னிடம் நானே போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பேனே தவிர அடுத்தவர்களின் தலை அசைவிற்காக  விற்கமாட்டேன்!
விழித்திருப்போம் விலகி இருப்போம் என்பது கோரோனாவிற்கு  மட்டுமல்ல சில போலியான சுய சுதந்திரப் போராளிகளிடம் இருந்தும் தான்.
இப்படிக்கு,
பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்.
Back To Top