தேவையான பொருட்கள்: –
குடமிளகாய் -4
தக்காளி -2
தனியா -2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவியது -1/2 கப்
கரம் மசாலா தூள் -1/4 டீஸ்பூன்
எண்ணைய் -2 டேபிள் ஸ்பூன்
பொடித்த வேர்கடலை -2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்வத்தல் -2
செய்முறை:
குடமிளகாய் காம்பு நீக்கி எடுத்து நடுவில் கீறி வைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணைவிட்டு காய்ந்ததும் குடமிளகாய்களை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து லேசாக வதக்கி பிறகு மூடி வைத்து குறைத்து தீயில் வதக்கவேண்டும்.
மிக்ஸியில், தக்காளியை அரைத்து எடுத்து இத்துடன் சேர்த்து வதக்கவும் தேங்காய்துருவலுடன் தனியா, மிளகாய்வத்தல் சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
குடமிளகாய் வதங்கியதும் அரைத்த விழுது, பொடித்த வேர்கடலை மேலும் சிறிது உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
குடமிளகாயுடன் கிரேவியும் சேர்த்து சிறிது கெட்டியான பதம் வந்ததும் இறக்கிவைத்து சூடாக சப்பாத்தி அல்லது சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
ஜெயந்தி
image credit: foodviva