மாநில அரசின் கீழ் பல துறைகளும் இயங்கி வருகின்றன அப்படி இருக்கும் எண்ணற்ற துறைகளில் “உணவு வழங்கல்” மற்றும் காவல்துறை “இந்த இரு துறைகளும் மக்களோடு தினம் சந்திக்கும் துறைகள் ஆகும்.
அப்படி மக்களோடு தினம் பழகும் அந்த துறைகளை சேர்ந்தவர்கள் தாங்கள் மக்களின் சேவகன் என்ற எண்ணம் இருப்பது இல்லை என்பது மிக பெரிய வருத்தமே.
இங்கே அரசில் வேலை செய்யும் ஊழியர்கள் ஏதோ தாங்கள் கடவுள் போலவே நினைக்க தொடங்கி விடுகின்றனர் அங்கே வரும் மக்களிடம் இன்முகம் காட்டி கூட பேச வேண்டாம் மாறாக அவர்களை அவமரியாதையாக நடத்தாமல் இருக்கலாம் ஆனால் அங்கே வரும் பாமரனை அவர்கள் மதிப்பது இல்லை என்றே கூறலாம்.
மக்களை காக்க காவல்துறை என்று எல்லோரும் நினைக்கிறேன் ஆனால் மாறாக அவர்களோ மக்களை அவமதிக்கின்றனர், ஏதேனும் விடயம் தொடர்பாக காவல் நிலையம் செல்லவே பாமரன் அஞ்சுகிறான் பணிச்சுமை காரணமாக அவர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம் அரசு அவர்களுக்கு மருத்துவ கவுன்சலிங் கொடுக்க வேண்டும் அதோடு பாமரனிடம் நடந்து கொள்ளும் முறைகளையும் போதிக்கணும் காவல்துறையை மக்களின் நண்பனாக கருத வைக்க வேண்டும்.
ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில நல்ல காவல்துறையினரால் ஒட்டு மொத்த துறையினரையும் மக்கள் தூற்றுவது வருத்தமே.
ஆதங்கத்துடன் – சோழன்