அப்பா போல்
அடுத்தவர் இருப்பாரா…..
கோபப்படுத்தினாலும்
குறை சொன்னாலும்
குற்றம் பார்த்தாலும்
அழவைத்தாலும்
நமக்கென்று ஒன்றென்றால்……..
உடனே துடிப்பது
உள்ளம் பதைப்பது
உயிர் வருத்துவது
அப்பாதானே……..
அப்பா…..
அப்பா…..என
அடிக்கடி
அழைத்தாலே
அப்பா நம்
அன்பு பிடியில்.
அப்பா எதிர்பார்ப்பது நம்மிடம்
அன்பு வார்த்தைகளை மட்டுமே
அம்மாபோல்
அன்பை காட்டத்தெரியாதவர்
அப்பா.
அம்மாவிற்கு இணையான
அன்பை நம் வாழ்வில் ஊட்டத்தெரிந்தவர்
அப்பா.
மறைந்திருக்கும் அப்பாவின்
மடைகட்டிய அன்பை
உணர மட்டுமே முடியும்.
அதுதான் அப்பா………..
கனிவுடன்,
கஸ்தூரி ஆண்டாள் சரவணன்.