ஏனோ வானிலை மாறுதே!!

Crop couple holding crafty heart Free Photo
அந்த மிகப் பெரிய பங்களாவின் வரவேற்பறையில் அமர்ந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். 25 ,26 வயது இருக்கும் நல்ல உயரம், அழகிய முகம், இளம்சிவப்பு வண்ண டாப்ஸ் நீல நிற ஜீன்ஸ் போட்டிருந்தாள். பார்ப்பதற்கு சினிமா நடிகை போல இருந்தாள்.
அப்போது அங்கு வந்த வேலையாள், ” சார் இப்ப வந்துடுவார் மேடம்!”, என்று அறிவிப்பாய் சொல்லிவிட்டுப் போனான் மூன்றாவது தடவையாக. “ஓகே !”என்று சலித்துக் கொண்டு  சொல்லிவிட்டு தலையைத் திருப்பி அந்த அறையை ஆராய்ந்தாள்.
சுவரில் மாட்டியிருந்த கௌதமின் நிழற்படம் கண்டு , ‘அழகான சிரிப்பு அளவான நிறம் தாடி மீசை என்று எவ்வளவு வசீகரம் அந்த முகத்தில் ! திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவன். இவன் அழகிற்கு கதாநாயகனாக நடித்தால் அடுத்த சூப்பர் ஸ்டாராக கூட வாய்ப்புண்டு. ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதை திட்டவட்டமாக இதற்கு முந்தைய இன்டர்வியூகளில்  கூறியிருக்கிறான்’, இவ்வாறு யோசித்தவாறே தன் ஃபேன்சி ஹேண்ட் பேக்கிலிருந்து நோட்புக் ஒன்றையும், பேனாவையும் தேடி எடுத்தாள். இப்பொழுது இவள் இங்கு வந்திருப்பது இயக்குனர் கௌதமை இன்டர்வியூ செய்வதற்காகத்தான்.
சரியாக நோட் புக்கையும், பேனாவையும் எடுத்து வைக்கும் நேரம், அலட்டல் இல்லாமல் அங்கு வந்து “ஹே! சாரி ஃபார் மேகிங் யூ வெயிட்.. ரொம்ப நேரமாயிடுச்சா?” என்று கேட்டவாறு அவள் எதிரில் அமர்ந்தான் கௌதம். “ஆ.. இல்லை.. இப்போதான்.. இட்ஸ் ஓகே! ஆக்சுவலி.. நைஸ் மீட்டிங் யூ!”  என்று ஏதேதோ உளறி பின்பு சுதாரித்துக் கொண்டு “ஐ அம் தியா!  ரிப்போர்ட்டர் ஃப்ரம் கனவுகள் e-magazine” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
சம்பிரதாயமான கைகுலுக்கல்க்குப்பிறகு ,“ஆரம்பிக்கலாமா?” என்றான் கௌதம் ஒரு சிறு புன்னகையுடன். “ஓ எஸ்!”, என்றவாரே நோட் புக்கை ஓபன் பண்ணி வைத்துக்கொண்டு, கெமிஸ்ட்ரி வகுப்பில் நோட்ஸ் எடுக்கும் பெண்ணை போன்ற பாவனையுடன் பொறுப்பாக அவனை பார்த்து, ” உங்க பிலிம் கனவே களையாதே பார்ட் 2 ரிலீசாகி சக்சஸ்ஃபுலா ஓடிட்டு இருக்கு.. கங்கிராட்ஸ்!”, என்றாள்.
” தேங்க்யூ!”, என்றான் அதே சிரிப்பு மாறாமல்.
” 6 வருட இடைவெளியில் உங்க முதல் ஹிட் படத்தோட இரண்டாவது பாகம்.. அதே காதல் ..அதே பீலிங் இன்னும் மறக்கலையா உங்க ஜெனியை ? “, என்று கேட்டவளை ஆராய்ந்து ஒரு நொடி பார்த்து விட்டு, “யாரால தான் ஜெனியை மறக்க முடியும்? ஆறு வருட இடைவெளியில் மக்கள் மறக்கல.. நீங்க மறக்கல ..அப்புறம் நான் மட்டும் எப்படி?”,  என்று சொல்லி சிரித்தான்.
“அதில்ல.. கனவே களையாதே பார்ட்-1 உங்க நிஜ காதல் கதையை தழுவி எடுக்கப்பட்டதுனு எல்லாருக்கும் தெரியும் ..பட புரமோஷன்ல நீங்களே சொன்னது தான்.. இப்போ 6 இயர்ஸ்க்கு அப்புறம் செகண்ட் பார்ட்லயும் ஜெனி.. ஜெனி.. தான்!  இன்னும் உங்க நிஜ ஜெனிய நீங்க மறக்கல அப்படித்தானே?”, என்று விடாமல் கேட்டாள் அவள். ” ஹம்ம்… மறக்கல ! முதல் காதல் முதல் முத்தம் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே !”, என்று கவிதை போல் அவன் கூறவும். “
“அப்போ கடைசிவரை ஜெனி  தானா? உங்க வீட்ல உங்களுக்கு தீவிரமாக பெண் பார்க்கிறதா நியூஸ் வந்துட்டு இருக்கே! கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டீங்களா?  ஐ மீன் ..ஜெனிய மறக்காமலேயே ? “, என்று கேட்டுவிட்டு சட்டென்று பற்களைக் கடித்துக் கொண்டாள். “சாரி.. ரொம்ப பர்சனல் ஆன கேள்வி கேட்டுட்டேனு நினைக்கிறேன்.. யூ டோன்ட் ஹவ் டு அண்சர் ட் !“, என்று தடுமாறியவளிடம், நிதானமாக, ” இட்ஸ் ஓகே! ஐ வுட் லைக் டூ ஆன்சர் யுவர் குவஸ்டியன்.. இன்னும் உன் முதல் காதலிய மறக்காத ..அதே பீலிங் ஓட சுத்துற நீ எப்படி கட்டிக்கப்போற மனைவிக்கு நேர்மையா நடந்துப்ப.. எப்படி அவளை பைத்தியமா காதலிப்ப..அது அவளுக்கு பண்ற துரோகம் இல்லையா? னு கேட்குறீங்க .. கரெக்ட் தானே ??“, என்று வெளிப்படையாக அவன் கேட்கவும் தடுமாறிப் போனாள் அவள்.
” இ..இல்ல..நா ..அப்டீ..” என்று குளறியவளை, ” ரிலாக்ஸ்! ஐ அண்டர்ஸ்டாண்ட்!  அண்ட் இப்போ உங்க கேள்விக்கான பதில்.. எஸ் !! நா ஜெனிய இன்னும் மறக்கல.. மறக்கவும் மாட்டேன்.. ஜெனி என்ன விட்டுப் போயும் , கல்யாணம் குழந்தைனு  செட்டில் ஆகியும்.. நா ஜெனிய விடாமல் பிடிச்சிட்டு இருக்கிறது சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக, சிலருக்கு அயோக்கியத்தனமாக தெரியலாம்.. ஆனா என்னப் பொறுத்தவரைக்கும் அது காதல், காமம் எல்லாத்தயும் கடந்த ஒரு உன்னதமான அன்பு ..நினைவுகள் அ மட்டும் சுமக்ர சுகமான சுமை ..சிலருக்கு பால்ய நண்பர்கள் ..சிலருக்கு சொந்த ஊர் ..பலருக்கு அப்பா அம்மா.. எனக்கு ஜெனி! எனக்குள்ள இருந்த இயக்குனரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஒரு நம்பிக்கை.. ஹோப் அதுதான் அவ..!”, என்று தீர்க்கமாக சொல்லி முடித்தவனை, குழப்பமாக பார்த்தாள் அவள்.
Couple in a sunset Free Vector
ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு நோட் புக்கை மூடி ஹேண்ட் பேக் இன் உள்ளே வைத்தாள். “அவ்ளோதானா.. இன்டர்வியூ முடிந்ததா ?”, என்றான் கௌதம் கேள்வியாக. ” ம் .. அவ்ளோதான்.. தேங்க்ஸ் பார் அன்ஸ்ரிங் மை குவஸ்டியன்ஸ் பேஷன்ட்லி.. ஆல் சோ சாரி ஏதாவது தப்பா கேட்டு இருந்தா!”,  என்று தயங்கியவளிடம், ” நோ இஸ்யூஸ் திவ்யா! ஐ டின்ட் மிஸ்டேக் யூ.. ஆக்சுவலி ஐ என்ஜாய்ட் ஸ்பீக்கிங்    வித் யூ..” என்று கைகுலுக்கியவனிடம் விடைபெற்றுக் கொண்டு, ஹேண்ட்பேக்குடன் திரும்பி நடக்க ஆரம்பித்தவள், சட்டென்று உறைந்து போனாள். ‘ நோ இஸ்யூஸ் திவ்யா!.. திவ்யானா சொன்னான்?! ‘என்று திடுக்கிட்டு மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
” வாட் ஹேப்பெண்ட் திவ்யா?“, என்று சிரிப்போடு அவன் கேட்கவும், “நா..தியா ..இல்ல..திவ்யா..உங்..“, என்று தடுமாறியவளின் அருகில் சென்று, ” கூல் டவுன்.. உட்காரு..ம்..சிட் டவுன்!“, என்று அவளை சோஃபாவில் அமர்த்தினான்.
Couple in love Free Photo
திரு திருவென்று விழித்தவளின் அருகில் அமர்ந்து ,“எனக்கு தீவிரமாக பெண் பார்க்கும் விஷயத்தை உனக்கு சொன்னவங்க, பெண்களோட ப்ரொபைல் அண்ட்  ஃபோட்டோஸ்ஸயும் என்கிட்ட காமிக்கிறாங்க -ன்ற விஷயத்தை சொல்லலையா ? “,என்று அவன் பாணியில் சிரிக்காமல் கேட்டான் கௌதம். அவனை நேரில் சந்திக்க முடியாமல் கண்களை கீழே தாழ்த்தியவாறு அமர்ந்திருந்தவளின் மோவாயை பிடித்து தூக்கி, அவள் விழிகளை நேரில் பார்த்து, “பேரு திவ்யா ..டான்ஸ் டீச்சர்.. கதகளி பரதநாட்டியத்தில் புலி! ஆனா ரிப்போர்ட்டர்ஸ் யாரும் இப்போ நோட் புக்ல நோட்ஸ் எடுக்கிறது இல்ல ன்ற விஷயம் மட்டும் தெரியல பாவம்!!”, என்று கேளி போல் கூறவும் அவன் கையை விலக்கிவிட்டு எழ முயற்சித்தவளை அழுத்திப் பிடித்து உட்கார வைத்தான்.
“உன்னோட ப்ரொபைல் பாக்குறதுக்கு முன்னாடி ஒரு ஆயிரம் ப்ரொபைல்ஸ் பார்த்து இருப்பேன்.. ஆனா எதுவும் என்ன நிறுத்தல ..ரொம்ப சிம்பிளா ,சமூக அக்கறையுள்ள, சோசியல் காசுக்காக ஃபண்ட் ரைசிங் பண்ற ஒரு டான்ஸர்.. டான்ஸ் டீச்சர் ஆ உன்னோட ப்ரொபைல் தனியா தெரிஞ்சது! உன்னுடைய  இந்த க்யூட்டான, இன்னசென்ட் ஆன முகமும் தான்! “, என்று சொல்லியவனை குழப்பம் நீங்காமல் பார்த்தபடியே அவள், “ஆனால் இன்னமும் நீங்க உங்க..பழைய..கா..”, என்று வார்த்தைகளைப்  பிடிக்க தத்தளித்தவளின் கன்னங்களை கைகளில் தாங்கி, ” திவ்யா.. உனக்கு என்ன தெரியனும் இப்போ ? ஜெனி என் லைஃப்ல முடிஞ்சு போன சாப்டர்.. ஆனா நினைவுகள் இருக்கும்.. காதலா இல்லை ..நான் சொன்னேன்ல ஒரு நம்பிக்கை ..ஒரு ஹோப்..அப்படி இருக்கும்.. ஆனால் என் காதல் எங்க முடிஞ்சதோ..அங்க இருந்து நா உன்னை காதலிப்பேன்.. பைத்தியமா காதலிப்பேன்.. வாழ்க்கை பூரா.. “, என்று அவன் சொல்லவும், அவள் கண்களில் இருந்து புறப்பட்ட கண்ணீர் அவன் கைகளை நனைத்தது..
Valentines day envelope love letter with greeting card engagement ring Free Photo
அவள் விழி நீரை துடைத்தவாறே, ” இவ்ளோ ப்ரோபைல்ஸ்லயும், நீ என்ன தடுத்து நிறுத்தி எனக்குள்ள வந்த அதே நேரம் ..என் காதல பத்தி தெரிஞ்சுக்கணும் னு தைரியமா ரிப்போர்ட்டர் போல நீ வந்த பாரு.. உன்ன வீட்டுக்கு வெளில பார்த்த அந்த நிமிஷமே ஐ ஃபெல் இன் லவ் வித் யூ ..மாட்லி..டீப்லி. .” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
வெட்கத்தால் முகம் சிவந்த படி அவள் ,“அப்போ இவ்வளவு நேரமும் நா யாருனு தெரிஞ்சு தான் அப்படி இன்டர்வியூ கொடுத்தீங்களா?!”, என்று பொய்யான கோபத்தோடு கேட்டாள்.
“இல்ல இல்ல நீ ரிசப்ஷனில் வந்து உட்காரும் போதே உன்ன பார்த்துட்டேன்.. அதான் கட்டிக்கப்போற பொண்ண  ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போது நல்லா இருக்கணும் இல்ல..சோ.. குளிச்சுட்டு நல்ல பக்காவா ரெடி ஆகிட்டு வந்தேனாக்கும் “, என்று தன் பச்சை நிற டி-சர்ட்டை இழுத்து விட்டபடி அவன் காட்டிய இடத்தில் இதமாக சாய்ந்து கொண்டாள் அவள். ” இங்க என்ன சொல்லுது ?திவ்யா.. திவ்யா ..ன்னு சொல்லுதா?“, என்று அவள் குறும்பாக கேட்க சிரிப்பில் நனைந்தனர் இருவரும்…
எழுத்து – ப்ரியா பாலசுப்பிரமணியன்
Image Credit: Freepik
Back To Top