யார் குற்றவாளிகள் ?

விலைமகள் hashtag on Twitter

என் தொடை இடுக்கில்
தொலைந்துபோன எந்த
ஆண்மகனுக்கும்
தெரியவில்லை…
மனைவியை தவிர்த்து
வேறு மெத்தை
ஏறுபவன்..
” ஆண் ” அல்ல என்பது..!!!

– இளையபாரதி

விபச்சாரிகள், விலைமகள் இப்படி பல பேர் கொண்டு அழைக்கப்படும் ஒரு பெண் ஏன் அந்த பாலியல் தொழிலுக்கு வந்தாள், அல்லது தள்ளப்பட்டாள் என்பதை இந்தச் சமூகம் ஏனோ கணித்து அதை சீர் செய்ய முனைவதில்லை.

எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலுக்கு விரும்பி வருவது இல்லை. காரணம், பாலியல் தொழில் செய்கிறேன் என்று தன் பிள்ளையின் கல்வி சான்றிதழிலோ, அக்கம் பக்கத்தினிரடமோ வெளிப்படையாக சொல்ல முடியாத போது, சக மனிதரை போல் நற் பெயருடன் வாழ இந்தச் சமூகம் ஏற்காத போது, அது விருப்பமான தொழிலாக எப்படி இருக்கும்? தன்னிடம் வரும் ஆண்மகன் ஒவ்வொருவனும் கண்ணியத்துடனும், மதிப்புடனும், உடல் பாதிப்பு இல்லாமலும் நடத்துவான் என்று என்ன உத்திரவாதம்? ஏற்படக்கூடிய உடல் வலிகளும் பிணிகளும் பல. சுய மரியாதைக்கும், சமூக மரியாதைக்கும், உடல் நலனுக்கும் ஒரு போதும் இணங்காத, வெளியில் சொல்ல இயலாததை விருப்பமுடன் தான் செய்கின்றனர் என்பதை எப்படி ஏற்கமுடியும்?
விலைமகள் - காதல் கவிதை
கடைசி ஆயுதமாகவோ, சிலரின் கட்டாயத்தினாலோ, வேறு வாய்ப்பின்றியோ தான் பெண்கள் இதை ஏற்றிருக்க வேண்டும். இங்கே பாலியல் தொழிலில் இருப்பவர்களை இந்தச் சமூகம் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் வேதனையான விடயமே.
இன்று, பாலியல் தொழிலில் ஆண் பெண் என்ற பேதமில்லை, ஆண்களும் செய்வதை காண்கிறோம். பாலியல் தொழில் செய்யும் ஆண் அதை வெளியில் சொன்னாலும் சமூகம் பெரிதாக எடுத்துக்கொள்ளுமா என்பது சந்தேகமே.
அதுவே ஒரு பெண் சூழ்நிலை காரணமாக செய்யும் போது, அவளுக்கு நல்ல வேலைவாய்ப்புகளையோ தன்னாலான நல் உதவிகளையோ செய்வதை விடுத்து,  அவளுக்கு பல பெயர் சொல்லி அழைக்கிறது. அவர்களிடம் சென்று சுகம் அனுபவித்து அவர்களை அதே நிலையில் வைத்திருக்கும் நம் வீட்டு ஆண்களை அல்லவா முதலில் பழிக்க வேண்டும். இங்கு யார் குற்றவாளிகள்?
அவர்களை அந்த பாலியல் தொழிலில் இருந்து மீண்டு வாழ சமூகம் அவர்களுக்கு வாய்ப்பளிக்குமா?
– சோழன்
Back To Top