தேவையான பொருட்கள்
இட்லி ரவை 1கப்
அவல் 1/4கப்
உளுத்தம்பருப்பு 1/4கப்
உப்பு தேவையான அளவு
செய்முறை
இட்லி ரவை, அவல் இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து எடுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து அரைத்து, இத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த மாவில் தேவையான உப்பு சேர்த்து 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்து இட்லி தட்டில் இட்லியாக வார்த்து 7 நிமிடம் வேக வைத்து எடுத்தால் மிருதுவான இட்லி தயார்.
சூடாக சட்னி, சாம்பாருடன் பரிமாற சுவையாக இருக்கும்.
– ஜெயந்தி