சித்ரிதா ஹச்.எம் அறையை அடையும்போது, அதிதியும் அவள் தந்தையும் அங்கே வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு கடமையே கண்ணாக ஹச்.எம் ரூமிற்குள் அனுமதிக் கேட்டு நுழைந்தாள்.
அவளை பின்தொடர்ந்து அதிதியும், அவள் தந்தையும் அனுமதிக் கேட்டு நுழையவும், ஹச்.எம் அவர்கள் இருவரையும் பொதுவான ஒரு தலையசைப்புடன் வரவேற்று உட்கார சொன்னார்.
“ஹலோ மிஸ்டர்.ஆதர்ஷ், இவங்க தான் சித்ரிதா. உங்க பொன்னு அதிதியோட கிளாஸ் மிஸ்”
அவள் அவனை பார்த்து கைகுவிக்கவும்,அவன் பதில் வணக்கம் கூறினான்.
“மிஸ்டர் ஆதர்ஷ்.இப்போ உங்களை இங்க வர சொன்னதுக்கு காரணம் தெரியுமா உங்களுக்கு?”
“தெரியும் மேடம்.அதிதி டெய்லி ஸ்கூலுக்கு லேட்டா வரா. அதை பத்தி பேச தான் கூப்பிட்டுருக்கீங்க”
“எக்ஸாட்லி மிஸ்டர் ஆதர்ஷ். இது ஒரு பெரிய இஸ்யு இல்லைதான்,ஆனால் இதுவே தொடர்ந்துட கூடாது.அதான் உங்களை நேர்ல பார்த்து ஒரு வார்த்தை சொல்லிடலாமேன்னு கூப்பிட்டேன். இனிமேல் இது மாதிரி நடக்காம பார்த்துக்கோங்க”
“கண்டிப்பா மேடம். இனிமேல் இந்த மாதிரி நடக்காது.கண்டிப்பா டைம்க்கு அதிதி வந்துடுவா.ஐ கேரன்டி இட்”
“ஓகே மிஸ்டர் ஆதர்ஷ். அதிதி, யு மே கோ டு யுவர் கிளாஸ்”
சிறிதுநேரம் பேசிவிட்டு ஆதர்ஷ் வெளியே வரவும், ஹச்.எம் சித்ரிதாவிடம் பேச்சை தொடர்ந்தார்.
அவரிடம் பேசி முடித்துவிட்டு வெளியே வந்த சித்ரிதா, வெளியே ஆதர்ஷ் இன்னும் நின்றுக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றாள்.
“ஹலோ மேடம், உங்களோட கொஞ்சம் பேசணும்”
“சொல்லுங்க”
“நீங்க I.A.S கோச்சிங் எங்க முடிச்சீங்க?”
“ஹா….என்னது?எனக்கு புரியலை?I.A.S கோச்சிங்கா?”
“இல்லை, இப்ப நீங்க பசங்களுக்கு I.A.S ட்ரைய்னிங் கிளாஸ் தானே எடுக்குறீங்க?அதான் கேட்டேன்?”
“சாரி. நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல! நான் எந்த I.A.S கிளாசும் எடுக்கலை. நான் ஃபர்ஸ்ட் ஸ்டான்டடுக்கு கிளாஸ் எடுக்குறேன்”
“அப்போ என்ன மேடம்? ஃபர்ஸ்ட் ஸ்டாண்டட் தானே? ஏதோ I.A.S கிளாஸ் எடுக்குற மாதிரி, லேட்டா வந்தா கம்ப்ளைன்ட் பண்றீங்க?”
ஒரு வேக மூச்சை வெளியிட்டு விட்டு கண்களை மூடி திறந்து,”இதை நீங்க ஹச்.எம் மேடம் பேசும்போதே சொல்லியிருக்கலாமே?”
“இந்த பிரச்சனையை ஆரம்பிச்சது நீங்க தானே? உங்க கிட்ட தான் இதை பத்தி பேச முடியும்?”
“பாருங்க மிஸ்டர் ஆதர்ஷ், இது ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை. ஜஸ்ட் ஒரு வார்னிங் குடுத்தோம் அவ்வளோ தான். இந்த ஸ்கூல்ல நாங்க பிள்ளைங்களுக்கு படிப்பு மட்டும் சொல்லிக் குடுக்கலை.சில நல்ல பழக்கவழக்கங்களும் சொல்லிக் குடுக்குறோம். அதுல முக்கியமான ஒன்னு தான் நேரம் தவறாமை.இந்த வயசிலிருந்தே அதை கடைபிடிச்சாதான் வாழ்க்கை முழுசும் அது அவங்க கூட துணை வரும்”
“தேங்க்ஸ் ஃபார் யுவர் அட்வைஸ் மேடம்.அப்புறம் இந்த மாதிரி அட்வைஸ்க்கும் உங்க ஸ்கூல் பீஸ்ல சார்ஜ் பண்ணுவீங்களா இல்லேனா இது ஃப்ரீ தானா?”
கேட்டுவிட்டு அவள் பதிலை எதிர்பாரமால் ஸ்டைல்லாக தன் கூலர்சை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
அவன் போன திசையை பார்த்துக்கொண்டிருந்தவள், வேகமாக ஸ்டாஃப் ரூமை நோக்கிச் சென்றாள்.
கிளாஸ் எதுவும் இல்லாததால், கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பூஜா தொப்பென்ற சத்தம் கேட்டு, பதறிக்கொண்டு விழித்தாள்.
“அய்யயோ!பூகம்பம் வந்துடுச்சு.விஜய் என்னை காப்பாத்துங்க!”
“ஏய்!நான்தான்டி, புக்கை வச்சேன்.”
“நீயா?அடச்சே! புக்கை ஏன்டி இப்படி டொம்னு போடுற”
“யாருடி அது விஜய்?”
“என்னது விஜய் தெரியாதா?விஜய் தெரியாதா?”
“அதுக்கு ஏண்டி இப்போ இப்படி கத்துற?நம்ம ஆக்டர் விஜய் சொல்றியா?
“இளைய தளபதி இல்லடி, நான் சொல்றது தெலுங்கு ஹாட் ஸ்டார்,மை செல்லம், விஜய் தேவரகொண்டா. அவரு அப்படியே என் பக்கத்துல வந்து ‘ஹாய்’னு சொன்னாரு.அதுக்குள்ள வந்து கெடுத்துட்டா! பாவி”
“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், ஸ்கூல்ல வச்சி தூங்காதேனு.வேலை பாக்கும்போது நம்ம கவனம் வேற எங்கேயும் போகக் கூடாது.அதுவும் நாம பாக்குறது புனிதமான ஆசிரியர் வேலை.நாம எப்படி நடந்துக்கிறோமோ அப்படி தான் பசங்களும் நடந்துப்பாங்க.நம்மகிட்டேர்ந்து தான் நல்ல விஷயங்களை அவங்க கத்துப்பாங்க.அதான் சொல்றேன், இனிமேல் இப்படி எல்லாம் நடந்துக்காதே”
“அம்மாடி சொற்பொழிவு சுந்தரியே! இனிமேல் கோடி ரூபா குடுத்தாலும் நான் ஸ்கூல்ல தூங்க மாட்டேன்.எனக்கு விஜயும் வேண்டாம்,மகேஷ் பாபுவும் வேண்டாம்.ப்ளீஸ் இந்த சொற்பொழிவு மட்டும் பண்ணாதே”
“சரி, சரி.உன் மூஞ்சியே சரி இல்லேயே?என்ன விஷயம்?”
“அதை ஏன் கேக்குற?அந்த….அந்த ஆளு…” அவள் வேகபெருமூச்சு விட்டாள்.
“ஹேய்!ஹேய்!ரிலாக்ஸ்….பாருடா! யாரோ என்னோட பொறுமை பூர்னிமாவையே கோபப்பட வச்சிருக்காங்க. யாருடா அது?”
“ஏண்டி கவிதாயினி,சொற்பொழிவு சுந்தரி,பொறுமை பூர்ணிமா இன்னும் எத்தனை பேருடி வச்சுருக்க எனக்கு?”
“அது நிறைய இருக்கு.அப்பப்போ எடுத்து விடுறேன். இப்போ உன்னை கோபப்பட வச்ச அந்த ஆளு யாருன்னு சொல்லு”
“அந்த அதிதியோட அப்பா.அதான்டி என் கிளாஸ்ல படிக்குதே அந்த நியூ என்ட்ரி பொண்ணு, அந்த பொண்ணோட அப்பா. டெய்லி அந்த பொண்ணு ஸ்கூலுக்கு லேட்டா வருது.அந்த பொண்ணுகிட்டேயே ரெண்டு மூணு தடவை சொல்லி பார்த்தேன்,கேக்கலை.அதான் நம்ம மேடம்கிட்ட சொன்னேன்,அவங்க அவரை கூப்பிட்டு வார்ன் பண்ணினாங்க.அது என்னமோ பெரிய குத்தம் மாதிரி என்கிட்டயே வந்து நக்கலா பேசிட்டு போறாரு”
“ம்ம்க்கும்.நீ சும்மாவா இருந்திருப்ப?பிள்ளைங்களுக்கு படிப்பு மட்டும் முக்கியம் இல்லை.நேரம் தவறாமை கத்துக்கணும்,அப்போ தான் பின்னாள்ல அவங்க அதை கடைபிடிப்பாங்க அப்படி,இப்படின்னு ஏதாவது அட்வைஸ் பண்ணியிருப்ப. அதான் அந்த ஆளு கடுப்புல ஏதாவது சொல்லியிருப்பாரு”
“ஏய்!எப்படி டி?அப்படியே பக்கத்துல இருந்து கேட்ட மாதிரியே சொல்ற?”
“உன்னை பத்தி எனக்கு தெரியாதா?எத்தனை வருஷமா உன் கூட குப்பை கொட்டுறேன்”
“என்ன இருந்தாலும் அவரு பேசுனது ரொம்ப ஓவர் டி”
“என்ன இருந்தாலும் அந்த பொண்ணு பேசுனது ஓவர் டா” அதே வார்த்தைகளை தன் நண்பன் மித்ரனிடம் உதிர்த்துக் கொண்டிருந்தான் ஆதர்ஷ்.
“என்னடா ஓவர்?அவங்க கரெக்டா தான் சொல்லியிருக்காங்க! அதிதியோட நல்லதுக்கு தானே சொல்றாங்க.நீ கொஞ்சம் சீக்கிரம் தான் கிளம்பி தொலையேன்”
“ஏண்டா, நான் என்ன வேனுமின்னேவா கிளம்பாம இருக்கேன்.காலைலே எந்திரிச்சு அதிதியை ரெடி பண்ணி,சாப்பாடு ஊட்டி,நான் கிளம்பினு எப்படியாவது லேட் ஆயிடுது டா”
“அதுக்கு தான் கேர் டேக்கர் ஏற்பாடு பண்ணினேன். அவங்களையும் துரத்தி விட்டுடுற”
“டேய் நான் துரத்தலை டா. அந்த அம்மா தான் போய்டிச்சு”
“ஆமா நீ துரத்துனதே இல்லை பாரு.இதுவரைக்கும் எத்தனை பேரை துரத்தியிருக்க?”
“அவங்க எல்லாரும் குழந்தையை, குழந்தையா பார்க்க மாட்டிக்கிறாங்க.ஏதோ ரோபோ மாதிரி கன்ட்ரோல் பண்ண நினைக்கிறாங்க.அதெல்லாம் விடு, இப்போ நீ என்ன பண்ற, வேற ஸ்கூல் பாக்குற”
“டேய்! என்னடா குண்டை தூக்கி போடுற? உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல.இதுவே இந்த வருஷத்துல நாலாவது ஸ்கூல் டா. ஒவ்வொரு ஸ்கூலுக்கும் ஒவ்வொரு ரீசன் சொல்ற.உன் பொண்ணு பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சு”
“இப்படியே போச்சுனா சென்னைல உள்ள ஸ்கூல் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிச்சு நம்மளை ஊரை விட்டே அடிச்சி துரத்திடுவாங்க.ஒழுங்கா அமைதியா இரு.இதுக்குதான், அதிதியை எங்க வீட்ல வந்து விட்டுடுனு சொன்னா கேக்க மாட்டிக்கிற.சரி, பேசாம எங்க அம்மாவை உங்க வீட்ல வந்து கொஞ்ச நாள் இருக்க சொல்லவா?”
“டேய்!என்னடா பேசுற நீ?அவங்களுக்கு என்ன வயசாகுது?அவங்க எப்படி டா அதிதியை பார்த்துப்பாங்க?இனிமே நான் பார்த்துக்கிறேன் விடு. காலையில 5 மணிக்கு எந்திருச்சு எப்படியாவது டைம்க்கு ரெடி ஆயிடலாம்”
“நீ எந்திருப்ப, ஆனால் என் டார்லிங் எழுந்திருக்கனுமே?சன் ரைஸ் ஆகுறதுனா என்ன மாமானு கேக்குறா என் ஜில்லு”
ஆதர்ஷ் சிரித்துக்கொண்டே,”காலையில எந்திருச்சா, வரையறதுக்கு புதுசா கிரயான்ஸ் வாங்கி தரேன்னு சொன்னா கண்டிப்பா எந்திச்சிருவா என் அம்முகுட்டி”
“அதுவும் கரெக்ட் தான்.எல்லா புள்ளைங்களையும் சாக்லேட்,ஐஸ்கிரீம் குடுத்து தாஜா பண்ணனும்.ஆனா உன் பொண்ணு கிட்ட வரையலாம்னு சொன்னா போதும்.சரி,சரி! இந்த விஷயத்தை இதோட விட்டுரு. அந்த மேடம் கிட்ட போய் நீ வேற ஏதாவது பேசி, அவங்க அந்த கோபத்தை எல்லாம் நம்ம பாப்பாகிட்ட காட்டிட போறாங்க”
“அப்படி எதுவும் பண்ணினா, போங்கடா நீங்களும் உங்க ஸ்கூலும்னு அந்த ஸ்கூலுக்கு ஒரு குட்பை சொல்லிட்டு போயிட்டே இருப்பேன்”
“நீ செஞ்சாலும் செய்வ.ப்ளீஸ் டா.தயவுசெஞ்சு அந்த மாதிரி எதுவும் செஞ்சுடாத.கொஞ்சம் அமைதியா இரு”
ஆதர்ஷிடம் பேசிவிட்டு வைத்த மித்ரன் ரெக்கார்டிங் ரூமிற்குள் சென்று அமர்ந்தான். அவன் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு தனியார் ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜே வேலை. கலகலப்பாக பேசி எல்லாரையும் சிரிக்க வைப்பவன் மித்ரன். அவனது இயல்பே திறமையாய் வெளிப்பட, இந்த வேலை அவனுக்கு எளிதாக கிடைத்தது.
அடுத்த சில நிமிடங்களில், அவன் போனிற்கு தெரியாத எண்ணிலிருந்து மற்றுமொரு அழைப்பு வரவே, அதற்கு காது குடுத்தவன், மறுமுனையிலிருந்து கிடைத்த செய்தியில் தீவிர சிந்தனைக்கு ஆளானான்…..
சித்திரம் பேசும்
சக்தி பாலா