இந்தக் கட்டுரை பலருக்கும் முகம் சுழிக்க வைக்கலாம் சிலருக்கு அமைதியை கொடுக்கலாம், சுதந்திரம் அடைந்து 73 வருடம் முடிந்து 74 வது வருடத்தில் இருக்கிறோம் இத்துணை வருடத்தில் பெண்களுக்கு ஏற்படும் அந்த 3 நாட்கள் பற்றி இன்றும் பல ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி சரியான புரிதல் இல்லை என்றே தோன்றுகிறது. இன்றும் அதை குறித்து வெளிப்படையாக பேச தயங்குகின்றனர்.
பெண்கள் உடலளவில் ஏற்படும் மாற்றங்களுடன் அவர்கள் உள்ளத்திலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அன்று, பெண்களின் மாதவிடாய் நாட்களில் தீட்டு என்று சொல்லி ஒதுக்கி வைத்தனர், ஆனால் அதன் மறைவில் உள்ள காரணத்தை சரிவர இளைய தலைமுறையில் பலர் புரிந்து கொள்ளவில்லை, அன்றைய நாட்களில் வீட்டில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பெண்கள் ஓய்வு இன்றி கடும் வேலை செய்து வந்தனர். அதன் பொருட்டு அவர்களுக்கு ஓய்வு கொடுக்க உருவாக்கப்பட்டதே அந்த நாட்கள்.
அந்த 3 நாட்களில் அவர்களின் உடல் நிலை பலகின பட்டு இருக்கும், அதானல் அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து ஆகாரம் கொடுத்து அவர்கள் உதிர இழப்பை ஈடு செய்தனர் பெரியோர்கள், ஆனால் இன்றைய நவீன காலத்தில் பெண்கள் வீட்டில் மட்டும் இன்றி வெளியிலும் பல வேலைகள் செய்து சாதித்துக்கொண்டிருக்கும் நாட்களில், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஆரோக்கிய குறைவுக்கு சரியான கவனம் செலுத்தப்படுகிறதா என்பது கேள்விகுறியே. அந்த நாட்களில் இழக்கும் உதிரத்தை ஈடு செய்யும் வகையில் உணவுகள் எடுக்கப்படுகிறதா? தேவையான ஓய்வு அளிக்கப்படுகிறதா?
மாதவிடாய் இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வு. அந்த நாட்களில் அவர்களை ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவுகளை அளித்து உடல் அளவிலும் பலபடுத்துவோம்.
- சோழன்