உலகமெங்கும் கொரோனா என்கிற கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது அமெரிக்கா உட்பட பல நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவித்து வருகிறது, இது ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவர்க்கும் பரவி வருகிறது.
அமெரிக்கா, ரஸ்யா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளும் சரி கீழை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் கூட கொரோனாவிற்கு தப்பவில்லை, உலக நாடுகள் அதன் நாடுகளில் உள்ள மக்களுக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆகும் செலவை அதன் அரசே ஏற்கிறது.
மருந்து இல்லை
கொரோனா என்ற பெருந்தொற்றுக்கு எந்த உலக நாடுகளும் இதுவரை மருந்து கண்டுபிடிக்க படவில்லை, எல்லா நாடுகளும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது இதில் சீனா மருந்து கண்டுபிடிக்க பட்டு சோதனையில் இருப்பதாக அறிவித்து உள்ளது .
கொரோனா கொள்ளை

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது இதனால் பல தொழில்கள் முடங்கி போய் உள்ளது, இந்நிலையில் நேற்று இந்திய மருத்துவ கழகம் கொரோனாவின் சிகிச்சைக்குத் தனியார் மருத்துவமனை எவ்வளவு வசூலிக்கலாம் என வெளியிட்டது, அதன் படி சில லட்சம் வரை வசூலிக்கலாம் என வெளியிட்டது மருத்துவ கழகம்.
இந்நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் அனுமதிக்க பட ரூபாய் 3 லட்சம் கட்ட வேண்டும் என்றும், ICU க்கு என்றால் தனியாக ரூபாய் 1 லட்சம் என்று அதன் ஊழியர் கூறுகிறார், கொரோனா தொற்று காரணமாக பலர் வேலை இழந்து தவிக்கும் நிலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு லட்சங்களில் செலவு ஆகும் என்று வந்த நிலையில் மக்கள் திகைப்படைந்து உள்ளனர், அரசு இதற்கான செலவை ஏற்குமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆசிரியர்: சோழன்