கேரட் அல்வா

Gajar halwa sweet

தேவையான பொருட்கள்
* கேரட்           –  1/4 Kg துருவியது
* சர்க்கரை     –  150 Gms
* கெட்டிப் பால் – 1 கிளாஸ்
* உப்பு             – ஒரு சிட்டிகை
* இனிப்பில்லா கோவா – 2 டேபிள் ஸ்பூன்
 ( விருப்பமிருந்தால்)
* 1 ஸ்பூன் நெய்யில் வறுத்த சிறிது முந்திரி, திராட்சை
செய்முறை
* கேரட் துருவ வேண்டும்,  கஷ்டமாக இருந்தால் துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் இரண்டு சுற்று சுற்றினால் போதும்.
*துருவிய கேரட்டை குக்கரில் முக்கால் க்ளாஸ் பால் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு போட்டு வேக வைக்க வேண்டும். ( 1 விசில்  போதுமானது), ( உப்பு சேர்த்தால் இனிப்பின் சுவை தூக்கலாக இருக்கும்).
* குக்கர் சத்தம் இறங்கியதும் அதில் சர்க்கரை, மீதமிருக்கும் பால் சேர்த்து சிறிது கெட்டி பதம் வரும் வரை அவ்வப்போது கிளறி விடவும், இப்போது தேவைப்பட்டால் கோவா சேர்க்கலாம்.
* நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கி சூடாக பறிமாறவும்.
* இனிப்பு கோவா சேர்க்கிறீர்கள் என்றால் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ளவும்.
பத்மபிரியா
Back To Top