இங்கே சிலருக்கு அக்குபஞ்சர் என்றால் பயம் கலந்த எண்ணம் உள்ளது இதனைப்பற்றி அறியாமை என்றே நான் சொல்வேன்……ஏன் என்றால் நம் நாட்டில் நம் முன்னோர்கள் வழிதான் எல்லாமே……போதிதர்மர் எப்படி தற்க்காப்பு கலையை உருவாக்கினாரோ அதேதான் இந்த அக்குபஞ்சர் மருத்துவ முறையும் நாம் இதனை அன்றாட வாழ்வில் செய்து வந்தோம் அவர்கள் இதனை பாடத்திட்டத்தில் சேர்த்து வீட்டிற்கு ஒருவருக்கு இந்த மருத்துவம் தெரிந்து வைத்துள்ளனர்……இதில் சிறு சிறு மயிரிழை போல் ஊசி பயன்படுத்தி நோயை குணப்படுத்துகிறோம்…

நம் உடலில் பொட்டு வைக்கும் இடம்/பிட்யூட்டரி கிளான்ட் உள்ள இடம் மனதை அமைதி படுத்தும்…..

நம் விரலில் மோதிரம் அணியும் இடம் மூவெப்பமண்டலம் சீராக இருப்பதற்காக..

நம் காதில் காது குத்தி கொள்வது தோடு போடுவது நம் இரு கண்களும் நன்றாக இருப்பதற்காக…

நாம் கழுத்தில் அணியும் தாலி+ஆரம் நெக்லஸ் போன்றவை இனவிருத்தி ஓட்ட பாதையை சரி செய்வதற்காக…..

கையில் வளையல் காப்பு போன்றவை அணிவது நிறைய நாட்கள் நன்மையுடன் வாழவும் அங்குள்ள புள்ளிகளை சரி செய்வதற்காக

காலில் கொலுசு தண்டை போன்றவை கர்ப்பபை வலுவடையவும் அடிவயிறு பிரச்சனைகள் தீருவதற்காக…..

மெட்டி அணிவது கர்ப்பம் தரிக்கவும் நம் வயிற்றில் எற்படும் பிரச்சினைகள் சரி செய்வதற்காக…..

ஆற்றில் குளத்தில் குளிப்பது கண் கழுவுவதற்காக நம் சீரான வெப்பத்தில் இருப்பதற்காக

வெறும் காலில் நடப்பது நம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதற்காக….

கை கால் அமுக்கி விடுவது எண்ணெய் போட்டு நீவி விடுவது நம் உடலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி உயிர் கொடுப்பதற்காக…..

தலையில் எண்ணெய் வைத்து சீப்பை போட்டு வாருவது தலையில் உள்ள அனைத்து புள்ளிகளையும் சரிசெய்வதற்க்கு…..
இதுதாங்க அக்குபஞ்சர் இதனை வீட்டில் செய்யுங்கள் இதனையெல்லலாம் நாகரீகம் என்ற பெயரில் நாம் பெற்ற பிள்ளைகள் சரிவர செய்யாமல் இருப்பதே நிறைய நோய்கள் உள்ளே வர காரணம் இதைத்தான் அக்குபஞ்சர் படித்த நாங்கள் சிறு சிறு ஊசியை கொண்டு சரி செய்கிறோம்….நன்றி