சேனைக்கிழங்கு கோலா உருண்டை

Ranjani’s Space

செட்டிநாடு அசைவ விருந்துகளில் மட்டன் கோலா உருண்டை நிச்சயம் இருக்கும். அதே சுவையில் சைவத்தில் சேனைகிழங்கில் கோலா உருண்டை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

சேனைகிழங்கு – 1/4 கிலோ

பெரிய வெங்காயம் – 1/2

பொட்டு கடலை – 2 மேஜைக்கரண்டி

தேங்காய் துருவியது – 3  மேஜைக்கரண்டி

சோம்பு – 1/4  மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய் – 4

கருவேப்பிள்ளை – 1 கொத்து

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • சேனைகிழங்கை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். கொஞ்சம் தண்ணீர் விட்டிருந்தால், பிழிந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில், சேனைகிழங்கு துருவலை, ஈரப்பதம் போக வதக்கவும்.
  • சூடு ஆறியதும், துருவிய தேங்காய், பொட்டு கடலை, மிளகாய், கருவேப்பிள்ளை, சோம்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த விழுதில், பொடியாக நருக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  • இந்த உருண்டைகளை மிதமான தீயில் எண்ணையில் பொறித்து எடுத்தால், சுவையான செனைக்கிழங்கு கோலா உருண்டை தயார்.

இதை வீடியோ வடிவில் பார்க்க,

 

Sivaranjani Rajesh

Back To Top