வேலைக்காரி

கடிகாரத்தில்  சுற்றும் வினாடி முள்ளாய் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறேன்..
பலமுறை உறக்கத்திற்கு
ஏங்கும் விழிகளுக்கும்
இன்னும் சிறிது நேரம்
கெஞ்சும் மெய்க்கும்
தடை போட்டு எழுந்து பறக்கிறேன்…
அரக்கபரக்க வாசலைத்
தெளித்து நாலு கோடுயிழத்து
தெருக்குழாய்யில்
தண்ணீரைப் பிடித்தும்
அடுப்பில் உலை கொதிக்க
அரிசியை வடித்து அரைவயிற்றுக்கு
கஞ்சியை குடித்து
மீதிக்கு தயிரை ஊற்றி
டப்பாவில அடைத்து
ஜெட் வேகத்தில் பயணிக்கிறேன்…
ஹோட்டலிலோ
எண்ணெய் சட்டியும்
எச்சில் தட்டுகளும்
கிண்ணங்களில்
சாப்பிட்ட மீதங்களும்
மிஞ்சிய
சாம்பார் சட்னி குருமாவும்
அரைகுறையாக உண்டும்
வீணாக்கிய
காய்கறிகளை கடித்து
துப்பிய எச்சில்களையும்
கொட்டிவிட்டு  இரும்பு நாரிலும்
ஸ்கரப்பில சோப்பும் சபீனாவால்
தேய்த்து கழுவ திரும்ப
 சேரும் பாத்திரங்களோ
கணக்கிலாவை…
உள்ளங்கையிலோ
சோப்பும் நாரும் கைகளைப்
பதம்பாக்க கீறலும்
ரேகைகளாக மாறி கோடுகள்
அதிர்ஷ்ட ரேகை சொன்ன
ஜோசியகாரனுக்கு தெரியாது…
ஈரத்தில் ஊறிய  கால்களோ
பாறை வெடிப்புகளாக
பிளந்து பள்ளத்தை
தோற்றுவித்தது..
உயிர்வதையின் கண்ணீரோ  கழுவும் பாத்திரத்தின்
தண்ணீரோடு கலந்தே
போகிறது …
மெதுவடையும் இட்லியும்
சாம்பாரும், புரோட்டோ
குருமா வாசனையை
நாசியை நுழைந்தாலும்
தயிர் சோற்றுக்கே
கரம் அணலாய் எரிய
ஒற்றை வயிற்றுக்கு
ஓடாய் தேய்யும் எனக்குயிட்ட
பெயரோ வேலைக்காரி..
சசிகலா எத்திராஜ்,
கரூர்..
Back To Top