உடல் என்றால் என்ன?
நமது உடலில் பனிரெண்டு உறுப்புகள் உள்ளன…. அவை நுரையீரல், கணையம், கல்லீரல், பித்தப்பை, இருதயம், கிட்னி , பெருங்குடல், சிறுங்குடல், மூவெப்பமண்டலம், சிறுநீர் பை, வயிறு, இருதயமேல் அறை….

இந்த பனிரெண்டு ராஜ உறுப்புகள்தான் மிக மிக முக்கியமானவை….மற்ற உறுப்புகள் அனைத்தும் இதனை சார்ந்த ஒட்டியுள்ள உறுப்புகள்….
சரி இதெல்லாம் மாத்திரை மருந்தால் ஆனதா?? இல்லை என்று தெரியும் உங்களுக்கு…. நாம் தாய் வயிற்றில் இருக்கும்போதே நம் உறுப்புகள் புதியதாக, தானே உருவாகும். புதியதாக படைக்க பட்ட நம் உடலை, நம் உடல் தானே சரி செய்யாதா?

தலைவலி என்றால் மாத்திரை… காய்ச்சல் என்றால் மாத்திரை… பேதி என்றால் மாத்திரை…
நமது உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்து ஒரு தலைவலி என்றால் உங்களுக்கு நம் உடல் நான் சரியில்லை என்று சொல்கிறது….காய்ச்சல் வருகிறது என்றால் நம் உடலில் இருக்கும் நோய்க்கு காரணமான கிருமியை சுட்டு பொசுக்குகிறது…. சளி என்றால் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்து வெளியே தள்ளுகிறது… பேதி என்றால் குடலை சுத்தம் செய்து உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது…. ஒரு இடத்தில் வலி வருகிறது என்றால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்காக போராடுகிறது….என்று பொருள்.

இதனையெல்லாம் மாத்திரை போட்டு போட்டு கழிவுகளை ரத்தத்தில் தங்கிவிட வைத்து விட்டு உடலை குறை கூறலாமா? எந்த நோயையும் ஆரம்ப கட்டத்தில் பார்த்து கண்டறிந்து ஆரோக்கியம் கலந்த மருத்துவமுறைகளையும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே எடுத்து கொண்டால் போதுமானது….நன்றி சிந்தித்து செயல்படுங்கள்…..

ஹீலர் சசிகலா
Image cedit: freepik