முகமூடிக்குள்…

முகமூடி – Youth Ceylon
என் பலவீனங்களையெல்லாம்
ஆண் என்ற முகமூடிக்குள்
மூடி மறைக்கிறேன் நான்.
தன் பலங்களையெல்லாம்
பெண் என்ற முகமூடிக்குள்
மூடி மறைக்கிறாள் அவள்.
மனிதம் மௌனமாக
மரித்துக்கிடக்கிறது.
– மாரிமுத்து
Back To Top