
தேவையான பொருட்கள்
* மாங்காய் – 1 கப் ( தோல் சீவி துருவியது)
* வடித்த சாதம் – 2 கப்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுந்து பருப்பு – 1 டீஸ்பூன்
* பெருங்காயம் – தேவையான அளவு
* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வறுத்த நிலக் கடலை – 3 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2 நீளவாக்கில் நறுக்கியது
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* உப்பு – ருசிக்கேற்ப
* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் துருவியது
* கொத்தமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன் ( பொடியாக நறுக்கியது)
செய்முறை :
* முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்
* அதில் கடுகு, உளுந்து பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்
* அனைத்தும் பொரிந்ததும், அதில் வறுத்த நிலக் கடலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
* பிறகு அதனுடன் துருவிய மாங்காய், பச்சைமிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து மாங்காய் சிறிது வதங்கும் வரை வதக்கவும்
* இப்போது வடித்த சாதம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
* சாதம் உடையாதவாறு பக்கவாட்டில் இருந்து கிளறி விடவும்.
* 2 நிமிடம் வரை குறைந்த தீயில் மூடி வைக்கவும்
* கடைசியாக துருவிய தேங்காய், நறுக்கிய கொத்தமல்லி கிளறி இறக்கி பறிமாறவும்.

பத்மப்ரியா