காற்றே என் வாசல் வந்தாய்!

Cute couple in love holding umbrella with many hearts .
அந்த காலியான நெடுஞ்சாலையில் மிக வேகமாக சிவப்பு நிற கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதை ஓட்டியபடி மியூசிக் சிஸ்டத்தில், ‘என் ஃபியூஸும் போச்சே..’என்ற பாடலை ஃபுல் வால்யுமில்  கேட்டுக்கொண்டிருந்தான் கார்த்திக். ரோட்டை பார்த்தபடியே எதையோ தீவிரமாக யோசித்தபடி, காரை தனிச்சையாக ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். அப்போது அவன் போன் ரிங்க்டோன் ஒலிக்க டச் ஸ்கிரீனில், அசோக் காலிங் என்று வந்தது அதை அட்டெண்ட் செய்து,”சொல்லுடா!”,என்றான். மறுமுனையில், “டேய்.. என்னடா உன்ன ரீச் பண்ணவே முடியல.. ரொம்ப நேரமா ட்ரை பண்ணிட்டு இருக்கேன் “, என்று அசோக் கூற “ஐ அம் டிரைவிங்! மேபி அதனாலயா இருக்கும்!..என்ன விஷயம்?”, என்று கேட்டான் கார்த்திக். “என்ன விஷயமா? லாஸ்ட் வீக் ‘டேட் அண்ட் மேரி’ ஆப்ல மீட் பண்ண ஒரு பொண்ண நேர்ல மீட் பண்ண போறதா சொன்ன..மீட் பண்ணிட்டு கால் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு, அப்படியே நாட் ரீச்சபிள் ஆயிட்டே.. என்னடா ஆச்சு?”, என்று அசோக் ஆர்வமாக கேட்க, “ஏதாவது நல்லதா நடந்தா சொல்லலாம் ..அப்படி எதுவும் நடக்கலையே ..”,என்றான் இவன். “என்னடா சொல்ற ?அப்போ அந்த பொண்ண நீ மீட்  பண்ணலையா?, என்று அசோக் மீண்டும் கேட்க,” மீட் பண்ணணே!”,என்று சொல்லிவிட்டு மீராவை முதலில் பார்த்த சம்பவத்தை கூற ஆரம்பித்தான்.
மீட்டிங் 1.
அந்த மிகப்பெரிய காபி ஷாப்பில்  அமர்ந்தபடி, போனையும் வாசலில் இருக்கும் கண்ணாடி கதவையும், மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் இன்ஜினியர். ஆனால் பார்த்தால் அவ்வளவு வயது ஆனது போல் தெரியாது. தலையில் கறுப்போடு போட்டி போட்டுக்கொண்டு எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிகளை தவிர. இவனுக்கு திருமணம் முடிக்க பல வருடங்களாக அவனுடைய பெற்றோர்கள் செய்த அனைத்து முயற்சியுமே தோல்வியில்தான் முடிந்தது .அப்படி இருக்கையில், நண்பனொருவன் ‘டேட் அண்ட் மேரி’ ஆப் பற்றி கூறவும், அதில் ப்ரொபைல் க்ரியேட்  செய்து, அதில் இருக்கும் பெண்களின் ப்ரொபைல் களை பார்த்துக்கொண்டிருந்தான் அப்பொழுது மீரா கிருஷ்ணன்,33 என்ற ப்ரொபைல் நேமை பார்த்ததும், கிளிக் செய்து ப்ரோபைலை பார்த்தவனுக்கு சட்டென்று பிடித்துப் போனது. உடனே ரிக்வெஸ்ட் கொடுத்தான். பின்பு அப்படியே உறங்கிப் போனான். சரியாக அடுத்த நாள் அதே நேரம் ‘ஹாய்’ என்று மெசேஜ் வந்தது மீராவிடம் இருந்து. ‘ஹலோ..ஐ அம் கார்த்திக் ‘,என்று ரிப்ளை செய்தான்.
இரண்டு நாள் டெக்ஸ்டிங்க்கு அப்புறம் ,போன் நம்பர் எக்ஸ்சேஞ்ச் பண்ணி,வாட்ஸ்ஆப், அப்பப்போ போனில் பேச்சு என்று நட்பு தொடர்ந்தது.ஒரு நாள் “மீட் பண்ணலாமா ?”,என்று மீரா கேட்க,” ஓ..எஸ்! கேட்கவே மாட்டிங்களோ னு நெனச்சேன்!”, என்று இவன் பதில் கூற, மறுநாள் மாலையில் 4 மணிக்கு காபி டேயில் மீட் பண்ண முடிவு செய்தனர். போட்டோஸ் கூட பார்த்ததில்லை. எப்படி இருப்பாள் என்று கூட தெரியாமல் இதோ இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறான் கார்த்திக். சட்டென்று கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வந்தாள் .இளம் பச்சை நிற லினன்  சாரி , ப்ரி ஹேர் விட்டு  பார்க்க பக்காவாக குரூம் செய்து கொண்டு நடந்து வந்தாள் சுற்றும் முற்றும் பார்த்தபடியே. 33 வயது என்று போட்டிருந்தாள் , பார்க்க அப்படி தெரியவில்லையே ?கடவுளே! இவ மட்டும்   மீராவாக இருக்கக்கூடாது..என்றும், தெரிஞ்சிருந்தா ஹேர் கலர் ஆவது பண்ணியிருக்கலாம் என்றும் பலவாறு தாறுமாறாக யோசித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து, கையசைத்து விட்டு அருகில் வந்தாள் அந்த பெண்.
” ஹலோ கார்த்திக்.. மீரா !”, என்று சொல்லியவாறே டேபிளில் அமர்ந்து கையை சம்பிரதாயமாக நீட்டினாள். அவன்தான் இவளுடைய போட்டோவை பார்த்ததில்லை. ஆனால் இவனுடைய போட்டோ சை அவள் பார்த்திருக்கிறாள். தடுமாற்றத்துடன் கையை குலுக்கி விட்டு ,”நைஸ் மீட்டிங் யூ!”, என்ற அவனால் சரியாக உட்கார முடியவில்லை. கையால் தலை முடியை கோதி விட்டு, பின்பு அதை சரிசெய்வது என்று ஏதேதோ செய்து கொண்டிருந்தான். இரண்டு நிமிடம் இப்படியே கழிந்து விட,”நைஸ் லுக்! ஐ மீன் யுவர்  ஹேர்.. சால்ட் அன்ட் பெப்பர் தான.. உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு”, என்றாள் மீரா. வெயிலில் வாடி வீட்டுக்கு வந்ததும் ஐஸ் மோர் குடிப்பது போல் இருந்தது அவனுக்கு. கொஞ்சம் படபடப்பும் குறைந்தது. அதற்குள் வெயிட்டர் வர,” எனக்கு ஒரு கேப்பச்சினோ! உங்களுக்கு?”, என்று மீரா கேட்க, ” ஃபில்டர் காஃபி!”,என்றான் அவன். ” வீ டோண்ட் ஹேவ் ஃபில்டர் காப்பி!,  என்று மெனு கார்டை அவன் பக்கம் எடுத்து வைத்தான் அந்த வெயிட்டர். மெனுவை பார்த்தவனுக்கு அதிலிருந்த எந்த ஐட்டமும் பிடிக்கவில்லை.
காபி ஷாப்ல காபியை தவிர மத்ததெல்லாம் இருக்கு என்று எண்ணியவாறே மெனுவில் முதலாவதாக இருந்த எக்ஸ்பிரஸோவைப் பார்த்துவிட்டு ,”எனக்கு ஒரு எக்ஸ்பிரஸோ!”, என்றான்.”ஓகே சார்!”, என்று விட்டு வெயிட்டர் நகர ,”கார்த்திக்.. எக்ஸ்பிரஸோ குடிச்சி இருக்கீங்களா? உங்களுக்கு பிடிக்குமா?”, என்று கேள்வியாக கேட்ட அவளிடம், ” யா..வெரி மச்!”,என்று பொய்யாக கூறி சிரித்தான். மேலான விசாரிப்புகளுக்கு நடுவே சூடான கேப்பச்சினோ மற்றும்  எக்ஸ்பிரஸோவும்  எடுத்து வந்தான் அந்த வெயிட்டர் .
அந்த டம்ளரில் கோகோ கோலாவில் சுட சுட ஆவி பறப்பது போல் வந்த எக்ஸ்பிரஸோவை பார்த்தவனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. ‘என்ன இது வரக்காப்பி !,”என்று மனதில் எண்ணியவனை,”லெட்ஸ் ட்ரிங்க் கார்த்திக்.. சூடாறிடப் போகுது “,என்றாள் மீரா, கேப்பச்சீனோவை உறிஞ்சியபடியே..”ம்ம்!”, என்று சிரித்தபடியே அதை வாயில் வைத்து உறிஞ்சியவனின் முகம் ஏகத்துக்கு மாறியது. எவ்வளவு கசப்பு! ” வாட் ஹேப்பெண்ட் கார்த்திக்?”, என்று அவள் கேட்க, “நத்திங் இட்ஸ் நைஸ்”, என்று சொல்லி சிரித்துக்கொண்டே அந்த கசாயத்தை குடித்து முடித்தான்.
” ஓகே! எனக்கு ஒரு கிளைன்ட் மீட்டிங் இருக்கு நாம நாளைக்கு பீனிக்ஸ் மால்ல மீட் பண்ணலாமா?, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும் நீங்க ப்ரீயா இருந்தா வாங்க!”, என்றாள் மீரா. “நாளைக்கு ப்ரீ தான்! நான் வரேன்”, என்றான் அவன். அதற்குள் பில் வந்துவிட, சட்டென்று வாங்கி தன் கார்டை வைத்து கொடுத்தாள் மீரா. பணம் எடுத்துக்கொண்டு கார்டை  கொண்டு வந்து கொடுத்ததும் அதை வாங்கி மீண்டும் பேகில் வைத்துக்கொண்டு, “பை கார்த்திக்..நைஸ் மீட்டிங் யூ..”,என்று அவள் புறப்பட தயாராக,” சேம் ஹியர் ..”,என்றான் அவன்.
இன்று காரில் ,
“டேய்.. அப்போ ஃபஸ்ட் டேட்டிங் ல அவள பில் பே பண்ண விட்டுட்ட.. என்னடா நீ?”, என்று அதிர்ச்சியாக கேட்ட நண்பனிடம், “என்ன என்னடா பண்ண சொல்ற ?நான் பண்ணதான் நினைச்சேன்.. அதுக்குள்ள அவ பண்ணிட்டா ..அதனால என்ன?”, என்றான் எரிச்சலாக .”கஞ்சூஸ் டா நீ.. சரி.. அப்புறம் நெக்ஸ்ட் டே ஷாப்பிங் போனியா இல்லையா?”, என்று கேட்டான் அசோக். ” ம்..போனேன்”, என்று பதில் கூறினான் கார்த்திக்.
மீட்டிங் 2- பீனிக்ஸ் மால்
அந்த பிரம்மாண்டமான மாலில் இருந்த சாரி புட்டிக்கில் புடவைகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா. அருகில் கார்த்திக். “கார்த்திக்.. இது எப்படி இருக்கு?”, என்று தன் கையிலிருந்த ரெட் சாரியை காட்டி கேட்டாள்.” குட்.. நல்லா இருக்கு!”, என்றான் இவன். அங்கிருக்கும் சேல்ஸ் கேர்ளை பார்த்து “ஹொவ் மச் ?”,என்றாள் மீரா. அந்தப் பெண் அருகில் வந்து புடவையை புரட்டி பார்த்துவிட்டு” ருபீஸ் 6000 ஒன்லி!”, என்றாள்.
“ஓகே.. பேக் திஸ்!”, என்று சொன்ன மீராவிடம், “மீரா.. வெயிட் !”,என்றான் கார்த்திக்.” என்னாச்சு கார்த்திக்? நல்லா இல்லையா?”,என்று கேட்டாள் மீரா. ” நோ நோ.. நல்லா இருக்கு.. ஆனா 6000 பக்ஸ்க்கு  டூ மச்! போத்தீஸ், சென்னை சில்க்ஸில் இதே சாரிய  ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக வாங்கலாம்”, என்றான். சொல்லி முடித்ததும் தான் அவனுக்கு உறைத்தது, தான் ஏதோ அளவு மீறி பேசி விட்டோம் என்று. மீராவின் முகம் சட்டென்று வாடியது. ஒரு நிமிடம் யோசித்து விட்டு, அந்தப் பெண்ணை நோக்கி” இப்ப வேண்டாம் .. சம்அதர் டைம்”, என்று விட்டு, “போலாம் கார்த்திக்..”, என்று சொல்லி கடையை விட்டு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தாள்.
இவன் ஏதோ சொல்ல வாயை எடுக்கும் முன்னமே,அவளுக்கு ஒரு கால் வர, அதை எடுத்துப் பேசிவிட்டு, ” ஒரு அர்ஜென்ட் வொர்க்.. உடனே கிளம்பனும்.. வி வில் கேட்ச் ஆப் லேட்டர்! பை!”, என்று விட்டு கிளம்பி சென்று விட்டாள் அவள். தலையை சொறிந்தபடி இவனும் வீடு திரும்பினான்.
இன்று காரில்,
“டேய் ..என்னடா பண்ணி வச்சிருக்க? பொண்ணுங்க ஒரு புடவை வாங்கினா.. நம்ப  2 ஆ எடுத்துக்கோன்னு சொல்லனும்னு எதிர்பார்ப்பாங்க! நீ என்னன்னா.. எடுத்த புடவைய வாங்க விடாம பண்ணி இருக்கியே..ஏண்டா நீயா வாங்கிக் கொடுக்கிற? அவ காசு அவ வாங்கிக்கிறா.. உனக்கு என்னடா?”,என்று ஆதங்கத்தில் பொரிந்தான் அசோக்.
“இல்லடா சாதா புடவை அது..புட்டிக்குல  வச்சி வித்தா.. 6000 ருபீஸ் ஆ?600 ரூபா  கூட போகாது.. எப்படி டா பார்த்துட்டு சும்மா இருக்க சொல்ற ?”,என்று இவன் கூற, “டேய் ..என் பசங்களுக்கு 13,10  வயசு ஆகுது.. அவங்க கிட்ட சொன்னா கூட இதை ஏத்துக்க மாட்டாங்க ..இப்படி இருந்தா உனக்கு எப்ப கல்யாணம் ஆகும்.. சரி.. அடுத்து நீ போன் பண்ணப்ப எடுத்தாளா.. இல்லையா?”, என்று கேட்ட அசோக்கிடம்,”ம்ம்.. அவளே கால் பண்ணா ..நெக்ஸ்ட் டே செம்மொழி பூங்கால மீட் பண்ணலாமா னு கேட்டா “,என்று இவன் சொல்லவும்,”பார்த்தியா.. நீ கொடுத்த டார்ச்சர்ல காசே செலவு பண்ண தேவைப்படாத இடமாக கூப்பிட்டு இருக்கா!”, என்று அசோக் கலாய்க்க,” டேய்..போடா..நான் போனை வைக்கிறேன்!”, என்று இவன் டென்ஷனாக,” டேய் டேய்.. சும்மா டா ..வாட் ஹேப்பெண்ட் இன் தி பார்க்? ஆமா நீ அவகிட்ட அந்த விஷயத்தை பத்தி எதுவும் சொல்லிடலயே.. அப்படி தானே?”, என்றான் அசோக் கேள்வியாக. “இல்லடா .. சொல்லிட்டேன்! அன்னிக்கு பார்க்ல..”, என்று பார்க்கில் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான் கார்த்திக்.
 மீட்டிங் 3- பார்க்
பூங்காவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தபடி, சுற்றி தெரிந்த பச்சை செடிகளையும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.”ஹாய்!”, என்று சொல்லி அவன் அருகில் வந்து அமர்ந்தாள் மீரா.” ஹலோ!”, என்றான் ஒரு மாதிரியாக. சாரி பார் த டிலே..வழியில் ஒரே ட்ராஃபிக் ..” என்று அவள் கூற,”நோ பிராப்ளம்!”, என்றான் இவன் .அவள் ஏதும் சொல்லும் முன்பே,” உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..”, என்று ஆரம்பித்தான் கார்த்திக். “சொல்லுங்க”,என்றாள் மீரா. “மீரா நான் வந்து.. நா ஒரு 8 யியர்ஸுக்கு முன்னாடி.. ஆபீஸ் வேர்க் பிரஷர்னால டிப்ரஷன்கு போயிட்டேன் ..கொஞ்ச நாள் சீஸோபெரினிக்கா இருந்தேன்.
அப்புறம் ட்ரீட்மென்ட் எடுத்து 1  யியர்ல ரெக்கவர் ஆயிட்டேன்.. ஸ்டில் அம் ஹேவிங் மெடிசின்ஸ்..பட் ஐ அம் நார்மல்.. எல்லாமே நல்லாத்தான் இருக்கு..  இந்த விஷயத்தை தெரிஞ்சுகிட்டதுக்கப்றமா.. எனக்கு வந்த நிறைய புரோபோசல்ஸ் தட்டி போய் இருக்கு.. அதனால தான் இப்ப வரைக்கும் எனக்கு கல்யாணமே ஆகல.. இத உங்ககிட்ட முன்னமே சொல்லணும்னு தோணுச்சு அதனாலதான் சொல்றேன்..”, என்றான் தடுமாற்றத்துடன்.
ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு ,அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக  கார்த்திக்கின் போன் சிணுங்க, அவன்  போனை எடுத்து காதில் வைத்து” ஹலோ..பாஸ்..!”,’ஒரு நிமிடம்!, என்று மீராவிடம் சைகைக் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போய் பேசிவிட்டு, திரும்பி வந்து பார்த்தால் அங்கு மீராவை காணவில்லை.போய் விட்டிருந்தாள் .கால் செய்து பார்த்தான் .கால் வெயிட்டிங் என்று வந்தது. ஒரு மாதிரியாக ஆகிவிட்டது இவனுக்கு. வீட்டுக்கு கிளம்பி போகும் வழியில் மீண்டும் போன் செய்தான்,போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் விட்டு விட்டான்…!
இன்று காரில்,
பேசுவதை நிறுத்தி ஒரு நிமிடம் ஆகியும் மறுமுனையில் பேச்சைக் காணோம்.” அசோக்.. இருக்கியா ?”,என்றான் கார்த்திக். “இருக்கேன் டா. உன்னல்லாம் என்ன சொல்றது.. இந்த விஷயத்தை அப்படி எதுக்குடா சீக்கிரமா சொல்ல வேண்டிய அவசியம் உனக்கு..”, என்றான் ஆத்திரமும் சோகமும் ஆக,”டேய்.. விடுடா.. என்னைக்கா   இருந்தாலும் சொல்லனுமில்ல.. அவ மேல எனக்கு கோவம் இல்ல டா ..சொல்லிட்டு போயிருக்கலாமேனு  ஒரு சின்ன வருத்தம் தான்.. 2 டேஸ் அகுது.. ஒரு கால் இல்ல மெசேஜ் இல்ல.. நான் பண்ணா.. நாட் ரீச்சபிள்னு  வருது.. சரி இது சரிப்பட்டு வராதுனு முடிவு பண்ணிட்டேன்.. அது மட்டும் இல்ல.. இது என்ன எனக்கு புதுசா..”, என்று விரக்தியாக சொன்ன கார்த்திக்கை பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது இவனுக்கு.
“விடு மச்சான் ..உனக்கு ஒருத்தி தேவதை மாதிரி வருவா..இவ  போனா போறா.. சரி மச்சான் ஏன் பாஸ் மூணாவது தடவை ஆ லைன்ல வரான்.. நான் திரும்ப கூப்பிடுறேன்..”,என்று சொல்லி போனை வைத்தான் அசோக். மீண்டும் பாட்டு கேட்டு கொண்டே காரை ஓட்டியவனுக்கு, ஒரு கால் வந்தது ஸ்கிரீனில் ‘மீரா காலிங்’, என்று வந்ததும், இவனுக்கு முதலில் ஒரு இனம் புரியாத சந்தோஷம்.. அடுத்த கணமே அது தொலைந்தது.அட்டென்ட் பண்ணாம விட்டுடலாம் என்று யோசித்து விட்டு,பின்பு சரி என்று அட்டெண்ட் செய்து,” ஹலோ!”, என்றான்.
மறுமுனையில், “ஹலோ.. கார்த்திக் .. ஸாரி கார்த்திக்.. பார்க்ல நீங்க போன் பேச போனப்போ, ஐ காட் எ கால்.. அப்பா பாத்ரூமுல வழுக்கி விழுந்துட்டாருனு.. பதட்டத்தில டக்குனு கிளம்பிட்டேன்..நடந்து போய் கார்ல ஏர்ற வரைக்கும் அத்தை லைன்ல இருந்தாங்க.. காரில் ஏறும்போது போன டிராப் பண்ணிட்டேன்..அது ஆப்  ஆயிடுச்சு.. அதுக்கு அப்புறம் ஆனே ஆகல.. இன்னைக்குதான் சரியாகி வந்தது ..அதான் உங்களுக்கு கால் பண்ணல.. வெரி சாரி பார் லீவிங் லைக்  தட்.. ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்!”, என்றாள் படபடவென்று. சற்று நிம்மதி பெருமூச்சு விட்டவாறே, “அப்பாக்கு எப்படி இருக்கு?”,என்று கேட்டான் இவன்.” லக்கிலி பிராக்சர் இல்ல..ஜஸ்ட் விழுந்த பெயிண் தான் .. இப்போ ஓகே!”,என்றாள் மீரா.”
நீங்க இப்படி ஒரு ரீசன் இல்லாம போயிருந்தா கூட,நா ரொம்ப ஃபீல் பண்ணி இருக்க மாட்டேன்”, என்றான் இவன். இதை சற்றும் எதிர்பாராத அவள், “ஏன்?”, என்றுக் கேட்டாள்.” பஸ்ட் மீட்டிங்ல..ஐ லெட் யூ பே த பில்.. அப்புறம் செகண்ட்  மீட்டிங்ல, நீங்க ஆசையா வாங்க நெனச்ச  புடவைய ஏதோ சொல்லி வாங்க விடாம பண்ணிட்டேன்..3 வது மீட்டிங்ல  உங்கள இன்னும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிட்டேன்..ஐ அம் நாட் எ  மேரேஜ் மெட்டீரியல் மீரா! நான் கல்யாணமே பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.. நீங்க விரும்பினா நாம நல்ல நண்பர்களா இருப்போம்..”,என்று இவன் விடாமல் கூறி முடிக்கவும்.. “பேசி முடிச்சாச்சா.. நான் பேசலாமா?”, என்று கேட்டு விட்டு அவளே தொடர்ந்தாள்.
” கார்த்திக், அன்னிக்கி போன் உடைஞ்சதுல  இருந்து இப்போ உங்களுக்கு கால் பண்ற வரைக்கும் நான் நார்மலாவே இல்ல.. அண்ட் ஃபஸ்ட் மீட்டிங்ல ..நீங்க நா பில் பே பண்ணப்போ,ஒண்ணுமே சொல்லல ..அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. ஏன்னா எப்பவுமே பசங்கதான் பில் பண்ணனும்னு ஒரு எழுதப்படாத சட்டம் ..ஏன் பொண்ணுங்க பே பன்னா என்ன தப்பு? நீங்க என்ன ஈக்குவல் டர்ம்ஸ்ல  ரெஸ்பெக்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு அப்பவே தோணுச்சு ..அப்பறம் செகண்ட் மீட்டிங்ல ..அந்த சாரி விஷயத்துல நான் உங்கள பாக்கல.. ஏன் அம்மாவ தான் பார்த்தேன்.. அடிக்கடி சொல்வாங்க.’ அனாவசியமா இந்த மாதிரி கடைகள்ல் ட்ரஸ் வாங்கி காசை கரியாக்காத.. போத்தீஸ் , சென்னை சில்க்ஸில் இதைவிட நல்ல டிசைன்ஸ் கிடைக்கும்னு..’ அம்மா என்ன விட்டு போய் அஞ்சு வருஷம் ஆகுது ..ஃபஸ்ட் டைம் வேற ஒருத்தர் கிட்ட எனக்கு அவங்களோட ஆஸ்பெக்ட்ஸ் தெரிஞ்சது..!”,என்று விட்டு சிறிது நேரம் பேசுவதை நிறுத்திவிட்டு, மேலும் தொடர்ந்தாள்,” அப்புறம் உங்க பிராப்ளம்.. கமான்!! கார்த்திக்..  டிப்ரஷன் ஒரு  வரக்கூடாத பிரச்சினையா? நமக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சனைனா.. டேப்லட்ஸ்  எடுத்துக்கறது இல்லையா? அது மாதிரி மனசுக்கு பிரச்சனை வந்தா ,டிரீட்மெண்ட் எடுத்துக்கறதுல என்ன தப்பு இருக்கு ? அதுவும் ஒரு பொண்ணுக்கிட்ட  ஈஸியா மறைக்கக் கூடிய விஷயத்த, அவ நன்மைக்காக ஆரம்பத்திலேயே சொல்லனும்னு யோசிச்ச அந்த மனசுக்கு சொல்லப் போனா எந்த பிரச்சினையும் இல்லனு தான் நான் சொல்லுவேன்!… கார்த்திக்.. நானே கேட்கிறேன்.. வில் யூ.. மேரி மீ? அப்பப்போ செலவு கொஞ்சம் ஜாஸ்தியாதான் பண்ணுவேன்.. ஆனா நீங்க கூட இருந்தா பேலன்ஸ் ஆயிடும்னு தோணுது..”, என்றாள் வெட்கத்தோடு.
மறுமுனையில் கண்களில் பெருகிய நீர் கண்ணங்களை நனைக்க, வாயடைத்துப் போய் இருந்தான் கார்த்திக்.” கார்த்திக்.. லைன்ல இருக்கீங்களா  ..ஏன் பேச மாட்டேங்கிறீங்க ?”,என்று மீரா கேட்க,” இருக்கேன்.. என்ன சொல்றதுனே தெரியல ..கனவா இல்ல  நிஜமானு புரியல.. நிஜம்தான்னா..அம் சோ லக்கி டு ஹேவ் யூ இன் மை லைஃப்!”, என்றான் இவன். ” ம்ம்.. கார்த்திக்.. மீட் பண்ணலாமா?”, என்றாள் மீரா.”ஷுயர்..எங்க..காப்பி டேலயா? இல்ல மால்லயா?”, என்று அவன்  கேட்க,” இல்ல.. போத்தீஸ் ல! அங்க பெட்டர் கலெக்சன்ஸ் இருக்குன்னு சொன்னீங்க இல்ல.. நாம சேர்ந்து ஷாப்பிங் பண்ணலாமா?”, என்று இவள் கூற ..”அம்மாடி..என்ன  மொத்தமாக சாச்சிட்ட.. இதுக்கு மேல ..ஐ அம் ஆல் யுவர்ஸ்..!”,என்றான் கார்த்திக்.  இருவரின் செல்லும் காதல் மழையில் நனைந்தன..
எழுத்து-ப்ரியா பாலசுப்பிரமணியன்
Back To Top