story

உனக்குள் நான் – அத்யாயம் 2

அசோக் வீடு என்பதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும் . மெயின் கேட் விட்டு நுழைந்தால் இருபுறமும் போகன்வில்லா பூக்கள், ரோஜா தோட்டம், ஆர்கானிக் உரமிட்ட கீரை மற்றும் காய்கறி தோட்டம், நீச்சல் குளம், கார் கராஜ் உள்ளே அடுக்க பட்ட வரிசையில் விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, ஒரு சிறிய கோயில், என ஆடம்பரத்தின் உச்சம் இந்த வீடு. 12 அடி உயர கதவு திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய வரவேற்பு அறை ஒரு கல்யாணம் நடத்தலாம் அவ்வளவு பெருசு, அடுத்து ஹால், டைனிங் பக்கத்துல சமையல் ரூம், 3 அடுக்கு மாடிலிப்ட் வசதியுடன் ஒவொரு அடுக்கும் 7 ரூம் கொண்டது. அதில் ஒரு லைப்ரரி, சினிமா ஹால், indoor ஸ்டேடியம் அடங்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் தங்க அவுட் ஹவுஸ் போல சகல வசதியுடன் ஜொலிக்கிறது அரண்மனை. மங்களம் அம்மாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார். பாவை டிபன் சாப்பிட்டிருந்தாள் மங்களம் " ரேஷ்மா பாப்பாவை கூட்டி பொய் படுக்க வை " ரேஷ்மா " கம் ஆன் பேபி " பாவை "பாட்டி அப்பா " என்று தான் வரைந்த படத்தை காட்டி அப்பாவிடம் காட்டவேண்டும் என்று சைகை செய்தாள். மங்களம் " அப்பா வர லேட் ஆகும், நீ ட்ராயிங் பண்ணத என்கிட்ட கொடு நான் அப்பாகிட்ட காட்டறேன் நீ போய் தூங்கு குட்டி " பாவை " போ பாட்டி " என்று அழ தொடங்கிய பாவையை ரேஷ்மா சமாதானம் செய்து கூட்டி சென்றாள். சிறிது  நேரத்தில் ரேஷ்மா மங்களத்திடம் "பாப்பா தூங்கிட்டா, ஆன்ட்டி நான் சொன்னா கோபப்படாதீங்க, atleast வாரம் ஒரு நாளாவது பாப்பா அப்பா கூட இருந்தா சந்தோசமா இருப்பா. ப்ளீஸ் ஆன்ட்டி. நான் சாப்பிட்டு தூங்கறேன்" என்று உள்ளே உள்ள சிறிய டைனிங் ஹால் நோக்கி சென்றாள். மங்களம் இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு தன் தட்டில் இருந்த தோசையை சாப்பிட முடியாமல் கை கழுவினாள். இன்று அசோக்கிடம் பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். டைனிங் டேபிள் மேல் சாய்ந்து யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தூங்கி போனார் . வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை முடித்து கொண்டு அவுட் ஹவுஸ் சென்றனர். ரேஷ்மா மட்டும் பாவை ரூம்க்கு தூங்க சென்றாள். 12 .20 am  அசோக் வீட்டிற்கு வந்தவுடன் அம்மா டைனிங் டேபிளில் சாய்ந்து தூங்குவதை பார்த்து ''அம்மா" என்றழைத்தான். மங்களம் " வா அசோக் இது தான் வீட்டிற்கு வர நேரமா? வா சாப்பிடு"…

2 years ago

உனக்குள் நான் – அத்யாயம் 1

'பூம்பாவை ' - அவளுக்காக  காத்து இருந்தேன். எப்பவும்வந்துவிடுவாள்  இந்தநேரம், அவளுக்குப்பிடித்த choccolava  குக்கி வைத்துக்கொண்டு காத்துஇருக்கிறேன் . அவளொரு குட்டிதேவதை. அவள் கண்களில் உள்ள வெளிச்சம்…

2 years ago

காக்கை குருவி எங்கள் ஜாதி

‘காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” அப்டீன்னு சொன்னாரில்ல பாரதியார்………….?” “ ஆமாமா…., கரெக்டு…. சொன்னாரு….. புத்தகத்துல படிச்சது நினைவுக்கு வருது.......ஆமா,…

2 years ago

நீதானே எந்தன் பொன் வசந்தம்….

"ஹலோ பரத்! எங்க இருக்கீங்க ஐ ஹேவ் ரிச்டு தட் ரெஸ்ட்ரன்ட்!", என்று கூறிய ஆதிராவின் செல்போனின் மறுமுனையில் இருந்து,"ஓ ..ஓகே ! நீ ஒன்னு பண்ணு…

2 years ago

ஏனோ வானிலை மாறுதே!!

அந்த மிகப் பெரிய பங்களாவின் வரவேற்பறையில் அமர்ந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். 25 ,26 வயது இருக்கும் நல்ல உயரம், அழகிய முகம், இளம்சிவப்பு…

3 years ago

THE RAGS TO RICHES STORY OF THE FANTASY QUEEN

We do not need magic to transform our world. We carry all of the power we need inside ourselves already. …

3 years ago

தொடுவானம்

''முனியாண்டி ,ஏய் முனியாண்டி  சத்தமா வாசலிலிருந்து கூப்பிட்டார்... தலையை சொறிந்தபடி வாளியை கையில் பிடித்தபடி வந்தவன் ''சொல்லுங்கள் அய்யா..'' ''ஏன்டா ''எத்தனை நாளா சொல்லிவிடுவது அந்தளவுக்கு பெரியமனிஷன்…

3 years ago