அந்தி சாயும் நேரம் அரையிருள் போர்த்திய வானம் அங்குமிங்கும் அலைபாயும் காலம் அமைதியாய் ஓர் நங்கை..! அலைபாயும் மனதை அடக்கும் வழி தோன்றாது அச்சுறுத்தும் காலங்களை, அற்பமான மனிதர்களை அறிந்ததினால் ஏற்ற ஏமாற்றங்களை அனிச்சையாய் விழுங்கியபடி...
மனதின் வலி மரணம் நிகழும் முன் என் மனக் கூச்சலின் சாராம்சத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறேன்.. உறக்கத்தை தழுவிருந்த மனசாட்சியை துயில் எழுப்பி எதிராளி கூண்டில் நிற்க வைக்க முயல… வானில் பறக்கும் பறவையின் கானல் ...
மறந்து போன வாழ்க்கை தடங்களை எதுவொன்று உன்னை நினைவுப்படுத்திச் செல்கிறது .. ஆழ்ந்த பதிந்த வடுக்களாக நீ பரிசளித்த கூர் மொழிகள் அழுந்திக் கொண்டே இருக்கிறது மனதினுள்… நிழலாய் நினைவு பனியாய் விழிகளில் படர்ந்திருக்கும் நீர்ப்படலங்களோ...
கடினமாயிருக்கிறது ..என் சிறகு மனதை வெறுமையாக்கி பொழியும் தூவான சாரலில் எண்ணங்களைப் புதுப்பிக்கிறேன் … எரிக்குழம்பில் சிதறும் அனல் சாரலில் சிறகுகளோ கருகிட பறந்திட நினைக்கும் சிறு பறவையாய் தவித்திடும் மனதை புதுப்பிக்கிறேன்… மணல் வீடுகளை...
கடிகாரத்தில் சுற்றும் வினாடி முள்ளாய் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறேன்.. பலமுறை உறக்கத்திற்கு ஏங்கும் விழிகளுக்கும் இன்னும் சிறிது நேரம் கெஞ்சும் மெய்க்கும் தடை போட்டு எழுந்து பறக்கிறேன்… அரக்கபரக்க வாசலைத் தெளித்து நாலு...
எழும்பி துள்ளிக் குதிக்கும் மீனாளின் மனமோ குதூக்கலத்தை குத்தகையெடுத்தது எதனாலோ…பரந்த அம்புதியின் அசைந்தாடும் கயலாய் உள்ளமோ உவகையோடு களிப்பில் நடனமாடியது எதனாலோ….வலம்புரி சங்கினுள் சேகரித்த காற்றின் இசை செவியில் இன்னிசைக்க நெஞ்சுருகி போனது எதனாலோ…பாசிபடிந்த பாறையில்...
தமிழ் எத்தனை வகைப்படும்? தெரியுமா அம்மா? என்கிறாய்.. அடுத்த நொடியே சிரித்தபடி பதிலும் உரைக்கிறாய்.. செந்தமிழ், பைந்தமிழ்,தீந்தமிழ், வண்டமிழ், நற்றமிழ் என்றடுக்கி ஒற்றைப் புருவம் தூக்கி எனை நோக்கி சிரிக்கிறாய்.. இன்னும் இருக்கிறது மகளே.. அன்பைச்...
என் பலவீனங்களையெல்லாம் ஆண் என்ற முகமூடிக்குள் மூடி மறைக்கிறேன் நான். தன் பலங்களையெல்லாம் பெண் என்ற முகமூடிக்குள் மூடி மறைக்கிறாள் அவள். மனிதம் மௌனமாக மரித்துக்கிடக்கிறது. – மாரிமுத்து
அப்பா… அம்மாவுக்கு இணையாய் அந்த பத்து மாதங்களும் – நீங்கள் நெஞ்சில் சுமந்தீர்கள் எங்களை.. எங்களின் பிஞ்சுப் பாதங்கள் எட்டி உதைக்கும் போதெல்லாம் உங்கள் நெஞ்சுக்குள்ளும் தாய்மை உற்சாகமாய் சுரக்கும்… எந்த வலியும் தாங்கிக் கொண்டு...
பரவசமாய் பூத்தே விடுகின்றன பற்றியெரிந்த காடுகளும்.. உடைந்த மரத்தின் குச்சிகள் பொறுக்கி வேறோர் மர உச்சியில் கட்டியே விடுகின்றன பறவைகள் இன்னுமொரு கூட்டை.. நீரழித்த தடங்கள் மறந்து பாதங்கள் பதிக்க ஓடத்தான் செய்கிறார்கள் ஒன்றுமறியாக் குழந்தைகள்.....