அந்தி சாயும் நேரம் அரையிருள் போர்த்திய வானம் அங்குமிங்கும் அலைபாயும் காலம் அமைதியாய் ஓர் நங்கை..! அலைபாயும் மனதை அடக்கும் வழி தோன்றாது அச்சுறுத்தும் காலங்களை, அற்பமான மனிதர்களை அறிந்ததினால் ஏற்ற ஏமாற்றங்களை அனிச்சையாய் விழுங்கியபடி...
இன்னும் அவள் என்னோடு இருக்கின்றாள்.. இறை தந்த வரமாய் என் கரம் பற்றி அன்பின் பேரொளியாய் என் இல் வந்தவள் என்னுள் வந்தவள்… சிற்றின்பத்தை பேரின்பமாய் உணர்ந்த தருணங்களில் என்னுணர்வுகளை தன்னுடலில்...
உலகம் எங்கோ முன்னேறிக் கொண்டிருக்கையில், இன்னும் பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தனத்தை போதிக்கும் கதைகளை எழுதிக் கொண்டும், அவற்றையே சிலாகித்துக் கொண்டும் ஒரு கற்பனை உலகில் மிதக்கும் பெண்கள் அதிகமிருக்கும் சூழலை எதிர்கொண்டிருக்கிறோம். பெண்களே தம்மை அடிமைக்குள்ளாக்கும் இது...
கடும் நோயின் அச்சுறுத்தல் இல்லை மரண எண்ணிக்கை அலைப்புறுதல் இல்லை வாகனசோதனைகள் இல்லை மருத்துவ சோதனைகளும் இல்லை நோய்ப்பரிசோதனை இல்லை அலட்டலோ பயமோ துளியும் இல்லை வேப்பமரத்துக் காற்றும் வேடிக்கைப் பேச்சும் துளசி தேத்தண்ணியும் உளுந்தங்...
எழும்பி துள்ளிக் குதிக்கும் மீனாளின் மனமோ குதூக்கலத்தை குத்தகையெடுத்தது எதனாலோ…பரந்த அம்புதியின் அசைந்தாடும் கயலாய் உள்ளமோ உவகையோடு களிப்பில் நடனமாடியது எதனாலோ….வலம்புரி சங்கினுள் சேகரித்த காற்றின் இசை செவியில் இன்னிசைக்க நெஞ்சுருகி போனது எதனாலோ…பாசிபடிந்த பாறையில்...
தமிழ் எத்தனை வகைப்படும்? தெரியுமா அம்மா? என்கிறாய்.. அடுத்த நொடியே சிரித்தபடி பதிலும் உரைக்கிறாய்.. செந்தமிழ், பைந்தமிழ்,தீந்தமிழ், வண்டமிழ், நற்றமிழ் என்றடுக்கி ஒற்றைப் புருவம் தூக்கி எனை நோக்கி சிரிக்கிறாய்.. இன்னும் இருக்கிறது மகளே.. அன்பைச்...
என் பலவீனங்களையெல்லாம் ஆண் என்ற முகமூடிக்குள் மூடி மறைக்கிறேன் நான். தன் பலங்களையெல்லாம் பெண் என்ற முகமூடிக்குள் மூடி மறைக்கிறாள் அவள். மனிதம் மௌனமாக மரித்துக்கிடக்கிறது. – மாரிமுத்து