சாத்தானின் உலகம்

Blurred bright red and orange firestorm texture on black background
சாத்தானின்
உலகமது…பொய்யுரைகளும்
ஊழல்களும்
ஏளனங்களும்
நிறைந்த கூடமிது..

இருப்பவன்
இருக்கிற வரை
ராஜாவாகிறான்..

இல்லாதவனோ
இருக்குமிடமின்றி
யாசகனாகிறான்…

உழைப்பவனும்
மது போதையில்
ஊதாரியாகிறான்..

கும்மாளமிட்டு
கூச்சலிட்டு காக்கைகளாக
கூட்டமிடுகிறான் ..

இறுக்கிப் பிடித்த
குரல்வளையில்
நுண்ணுயிரி
ஆட்டமா ஆடியது…

நசிவுத் தேவனின்
ராஜ்ய பாரம்
தொடங்கிவிட்டன …

அழிவு மேளம்
செவியில் பீதியை
கிளப்புகிறது…

மன்னிப்பும்
மறுதலிக்கப்
பட்டது ..

அழிவு
பாதையும்
அதர்களமானது…

மரண பயத்தில்
நடுங்க அசரரீயா ஓர்
குரல் ஒலிக்கிறது…

அது கடவுளின்
குரலாக இருக்குமோ
ஏங்கியது  மனம்….


சசிகலா எத்திராஜ் ,
கரூர்….
Back To Top