ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
ஒரு தாய் தன் மகனை பெற்றதை விடவும் பலர் அவனை அறிவிற்சிறந்தவன் என பார் கூறும் போதே அவனை பெற்றதை விடவும் பல மடங்கு இன்பத்தை அடைகிறாள் என்பது உலகப்பொதுமறை தந்த ஐயன் வள்ளுவன் வாக்கு

இன்றைய பெற்றோர்கள் தனக்கு ஒரு குழந்தை வேண்டும் செயற்கை கருத்தரிப்பு மையங்களிலும் காத்திருக்கின்றனர். ஆனால் இங்கே பெரும்பாலான குடும்பங்களில் உள்ள ஆண் பெண் இருவரும், பொருளாதார சிக்கலை சமாளிக்க, வேலைக்கு செல்வோராக உள்ளனர், ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் உறைவிட பள்ளிகளிலும், ஹாஸ்டலிலும் வளர ஆரம்பிக்கின்றனர்.
இங்கே வெறும் கடமையாக போகிறது பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு என்பது அப்படி கடமைக்காக வளரும் குழந்தைகள் நல்ல சமூகத்தை உருவாக்காது என்பது ஐயமில்லை. குழந்தை வளர்ப்பு என்பது இங்கே ஒரு சிற்பத்தை வடிப்பது போன்ற ஆக சிறந்த கலைகளில் ஒன்று அவர்கள் தான் நாளைய தலைவர்கள் அப்படி பட்ட குழந்தைகளை கலையாக நினைத்து பெற்றோர்கள் வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் சிறந்த மனிதர்களாக இருப்பர்.

இங்கே சமூக குற்றங்களுக்கு பாதி காரணம் குழந்தைகளை சரியாக வளர்க்க தெரியாத பெற்றோர்களே, ஒரு சிறந்த பெற்றோர்கள் சிறந்த குழந்தைகள் வளர்க்கின்றனர் குழந்தை வளர்ப்பை கலையாக அவர்கள் நினைக்கும் பட்சத்தில் அதை செய்கின்றனர்.
– சோழன்