அசோக் வீடு என்பதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும் . மெயின் கேட் விட்டு நுழைந்தால் இருபுறமும் போகன்வில்லா பூக்கள், ரோஜா தோட்டம், ஆர்கானிக் உரமிட்ட கீரை மற்றும் காய்கறி தோட்டம், நீச்சல் குளம், கார் கராஜ் உள்ளே அடுக்க பட்ட வரிசையில் விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, ஒரு சிறிய கோயில், என ஆடம்பரத்தின் உச்சம் இந்த வீடு. 12 அடி உயர கதவு திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய வரவேற்பு அறை ஒரு கல்யாணம் நடத்தலாம் அவ்வளவு பெருசு, அடுத்து ஹால், டைனிங் பக்கத்துல சமையல் ரூம், 3 அடுக்கு மாடிலிப்ட் வசதியுடன் ஒவொரு அடுக்கும் 7 ரூம் கொண்டது. அதில் ஒரு லைப்ரரி, சினிமா ஹால், indoor ஸ்டேடியம் அடங்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் தங்க அவுட் ஹவுஸ் போல சகல வசதியுடன் ஜொலிக்கிறது அரண்மனை. மங்களம் அம்மாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார். பாவை டிபன் சாப்பிட்டிருந்தாள் மங்களம் ” ரேஷ்மா பாப்பாவை கூட்டி பொய் படுக்க வை ” ரேஷ்மா ” கம் ஆன் பேபி ” பாவை “பாட்டி அப்பா ” என்று தான் வரைந்த படத்தை காட்டி அப்பாவிடம் காட்டவேண்டும் என்று சைகை செய்தாள். மங்களம் ” அப்பா வர லேட் ஆகும், நீ ட்ராயிங் பண்ணத என்கிட்ட கொடு நான் அப்பாகிட்ட காட்டறேன் நீ போய் தூங்கு குட்டி ” பாவை ” போ பாட்டி ” என்று அழ தொடங்கிய பாவையை ரேஷ்மா சமாதானம் செய்து கூட்டி சென்றாள். சிறிது நேரத்தில் ரேஷ்மா மங்களத்திடம் “பாப்பா தூங்கிட்டா, ஆன்ட்டி நான் சொன்னா கோபப்படாதீங்க, atleast வாரம் ஒரு நாளாவது பாப்பா அப்பா கூட இருந்தா சந்தோசமா இருப்பா. ப்ளீஸ் ஆன்ட்டி. நான் சாப்பிட்டு தூங்கறேன்” என்று உள்ளே உள்ள சிறிய டைனிங் ஹால் நோக்கி சென்றாள். மங்களம் இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு தன் தட்டில் இருந்த தோசையை சாப்பிட முடியாமல் கை கழுவினாள். இன்று அசோக்கிடம் பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். டைனிங் டேபிள் மேல் சாய்ந்து யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தூங்கி போனார் . வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை முடித்து கொண்டு அவுட் ஹவுஸ் சென்றனர். ரேஷ்மா மட்டும் பாவை ரூம்க்கு தூங்க சென்றாள். 12 .20 am அசோக் வீட்டிற்கு வந்தவுடன் அம்மா டைனிங் டேபிளில் சாய்ந்து தூங்குவதை பார்த்து ”அம்மா” என்றழைத்தான். மங்களம் ” வா அசோக் இது தான் வீட்டிற்கு வர நேரமா? வா சாப்பிடு” அசோக் ” ட்ரெஸ் மாத்திட்டு வரேன் டூ மினிட்ஸ்” என்று ரூம் சென்று ஷார்ட் , டீஸ் மாற்றி வந்தான். உயரம் 6’2″ உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு, கோதுமை நிறம், நேரான நடை 31 வயது ஆணழகன் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை அவன் சிரித்தால் அழகாக இருக்கும் ஆனால் அவன் சிரிப்பை தொலைத்து 3 வருடங்கள் ஓடி விட்டன. அசோக் “ஏன் அம்மா வெயிட் பண்ணறீங்க, தூங்கலாம் இல்ல உடம்ப கெடுத்துக்காதீங்க , சாப்பிட்டீங்களா?” மங்களம் ” சாப்பிட்டேன் டா நீ சாப்பிடு, டெய்லி இப்படி லேட்டா வர காலைல சீக்கிரம் கிளம்பிடுறே, நீ என்னோட பையன் நான் உன்னை எப்போ பார்க்கறது, பேசறது நீயே எனக்கு டைம் கொடு” என தட்டில் தோசை வைத்துக்கொடுத்தார் அசோக் “அம்மா கொஞ்சம் வேலை அதிகம் சாரி , சொல்லுமா என்ன பேசணும் ” தட்டை வாங்கிக்கொண்டே. மங்களம் ” இன்னைக்கு பாவையை ஹாஸ்பிடல் கூட்டி போனேன், ஸ்பீச் தெரபி தர, டாக்டர் வீட்டில் அவளோட நிறைய பேச சொன்னார், நீ அவளை பார்க்கறது இல்லேன்னு, பேசறது இல்லேன்னு ரொம்ப பாவை ஏங்கறாள்,நீ அவளுக்கு என்ன பண்ண போறே. அவ பிறக்கும் போது மீரா செத்து போனது அவளோட தப்பு இல்லையே, அவளுக்கு ஏன் தண்டனை கொடுக்கற.” அசோக் “அம்மா நான் அப்படியெல்லாம் நினைப்பேனா, டைம் இல்ல அவ்வளவுதான்”...
சுள்ளென்ற வெயில் மதியம் சுட்டெரித்தால்…., மாலை நேரத்தில் லேசான சாரல்…..சாரல் விழும்போது மனதுக்கு மகிழ்ச்சிதான், என்றாலும் கூடவே சில எண்ணங்களும் எச்சரிக்கை மணி அடிக்கத்தான் செய்கின்றன. மார்ச் மாதத்திலிருந்து எல்லோர் மனதிலும் கொரோனா தவிர்க்க முடியாத,...
தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பு -250 கிராம் வெல்லம் பொடித்தது -400 கிராம் ஏலப்பொடி -1/2 டீஸ்பூன் பால்கோவா ( சர்க்கரை சேர்க்காதது ) -250 கிராம் முந்திரி துண்டுகளாக்கியது -10 காய்ந்த திராட்சை -20...
‘பூம்பாவை ‘ – அவளுக்காக காத்து இருந்தேன். எப்பவும்வந்துவிடுவாள் இந்தநேரம், அவளுக்குப்பிடித்த choccolava குக்கி வைத்துக்கொண்டு காத்துஇருக்கிறேன் . அவளொரு குட்டிதேவதை. அவள் கண்களில் உள்ள வெளிச்சம் , அவள் புன்னகையில் உள்ள மின்னல் அவளை...
சித்ரிதா ஹச்.எம் அறையை அடையும்போது, அதிதியும் அவள் தந்தையும் அங்கே வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு கடமையே கண்ணாக ஹச்.எம் ரூமிற்குள் அனுமதிக் கேட்டு நுழைந்தாள். அவளை பின்தொடர்ந்து அதிதியும்,...
எப்படி உரையாடலை நகர்த்திச் செல்வது… ஆண் பெண் உரையாடலில் புதிதில் ஒன்றும் தெரியாது. என்ன சாப்பிட்ட ? இட்லியா? இட்லிக்கு பொடியா சட்னியா கூட ஆர்வமாக இருக்கும் சிலருக்கு (எல்லோருக்கும் இல்லை ).. பிறகு உரையாடல்...
தேவையான பொருட்கள்: – குடமிளகாய் -4 தக்காளி -2 தனியா -2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவியது -1/2 கப் கரம் மசாலா தூள் -1/4 டீஸ்பூன் எண்ணைய் -2 டேபிள்...
ஒரு குட்டி கதை சொல்லட்டா? அது ஒரு சர்வதேச குளிர்பான நிறுவனம். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகள் அவரது தனி செயளாளருக்கு போன் செய்து, தன் தாயிடம் பேச வேண்டும் என்று கூறுகிறாள். என்ன...
Wedding Day is a day that is very special & most dreamed of since a woman’s childhood. Every woman plans for her wedding for years after...
அவள் மனம் எப்படி துடித்திருக்கும் பத்து மாதம் சுமந்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் குழந்தை செல்வம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள் என்று அறிந்த நொடி. அச்செயலை அரங்கேற்றியவர்களைத் தவிர மற்ற அனைவருக்குள்ளும் எரியத் தொடங்கும்...