மறந்து போன
வாழ்க்கை தடங்களை
எதுவொன்று உன்னை
நினைவுப்படுத்திச்
செல்கிறது ..
ஆழ்ந்த பதிந்த
வடுக்களாக நீ
பரிசளித்த கூர் மொழிகள்
அழுந்திக் கொண்டே
இருக்கிறது மனதினுள்…
நிழலாய் நினைவு பனியாய்
விழிகளில் படர்ந்திருக்கும்
நீர்ப்படலங்களோ
வழியாமல் குளமாய்
தேங்கிப் பார்வையை
மறைக்கிறது…
நீயாகி போன என்னுயிரோ
பரந்த வெளியில்
பற்றற்று அசுர பறவையாய்
உன் நினைவு தடத்தை
அழித்தப்படி வீர்க் கொண்டு
பறக்கிறது…
நிழலும் நிஜமும்
கலந்த நினைவுகளின்
வாழ்க்கை பறவை
பூமியில் வட்டமாக
சுழல்வதும்…
நீ நீயாக
நான் நானாக
எது எதுவோ பேசியப்படி
வாழ்க்கை சக்கரம்
சுழல்கிறது
எழுத்து – சசிகலா எத்திராஜ்