
ஏமாத்திட்டாங்களேனு வருத்தப்படாம இவங்களைப் போய் ஏமாத்திட்டோமே என்று அவங்களே வருத்தப்படற அளவுக்கு வாழ்ந்து காட்டனும். கவலையை மறக்க சிரிக்க கூடாது, கவலையை மறந்து சிரிக்கனும். வெற்றி பெறும் நேரத்தை விட மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரும் வெற்றி. கடினமான பாதைகள் தான் அழகான இடங்களுக்கு அழைத்து செல்கின்றன. எதிர்ப்பும் பகையும் கூட மனிதனுக்கு அவசியமானவையே, அவற்றால் தான் மனம் உறுதி பெறுகின்றது. அவமானங்கள் பலரை வீழ்த்திடச் செய்கிறது, பொறுமை மற்றும் மன உறுதியுடன் செயல்பட்டால் அவமானம் கூட வெகுமானமாய் மாறிவிடும். அன்பு என்பது மற்றவர் மனம் மகிழச் செய்தல், பண்பு எனப் படுவது மற்றவர் மனம் வாடாமல் பழகுதல். மன உறுதி இல்லா உள்ளம் குழம்பிய கடலுக்கு சமம். உன்னை புரிந்து கொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பது இல்லை, உன்னை புரிந்து கொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை.
துன்பத்திலும் இன்பத்திலும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இந்த நிமிடம் நிரந்தரமில்லை. சூழ்நிலையால் மாறுபவர்கள் கண்ணீரோடு மன்னிப்பு கேட்பார்கள், சுயநலத்தால் மாறுகிறவர்கள்தான் கோபத்தோடு தர்க்கம் புரிவார்கள். அழிவை தருவது ஆணவம், ஆபத்தை தருவது கோபம், இருக்க வேண்டியது பணிவு, இருக்கக் கூடாதது பொறாமை, உயர்வுக்கு வழி உழைப்பு, கண்கண்ட தெய்வம் பெற்றோர், செய்ய வேண்டியது உதவி, செய்யக் கூடாதது துரோகம், பிரிக்கக் கூடாதது நட்பு, மறக்கக் கூடாதது நன்றி, வந்தால் போகாதது பழி, போனால் வராதது மானம்.
தவறு செய்யாத மனிதன் இல்லை, அதை திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை. பயந்தவனுக்கு “வலி” நிறைந்த வாழ்கை, துணிந்தவனுக்கோ “வழி” நிறைந்த வாழ்கை. வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு, வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது, வாழ்கை புத்தகத்தில்.
எண்ணங்களை கவனிக்கத் தொடங்கினால் வாழ்கை மாறும். வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை உயிரும் நேரமும் சொற்களும். உங்களை கோபப் படுத்தும் போது மௌனமாய் இருங்கள், விலக்கி வைக்கும் போது விலகியே இருங்கள், பெருமைப் படுத்தும் போது துள்ளி எழாதிருங்கள், உதாசீனம் படுத்தும் போது உடைந்து விடாமல் இருங்கள், அவமானப் படுத்தும் போது தவறியும் அழாமல் இருங்கள், தோல்வி அடையும் போது துணிந்து எழுங்கள், வெற்றி பெறும் போது பணிந்து இருங்கள், காயப் படுத்தும் போது கண்டும் காணாமல் இருங்கள்.
பாசம் கொண்டால் பிரிவு இல்லை. கோபம் கொண்டால் உறவு இல்லை. விழிகள் இல்லையெனில் பார்வை இல்லை. வலிகள் இல்லையெனில் வெற்றி இல்லை. முயன்ற மனிதர் தோற்றதில்லை.
வெற்றியின் படிகள்:
முதலாவது படி : தோல்வி
இரண்டாவது படி : அவமானம்
மூன்றாவது படி : கடின உழைப்பு
நான்காவது படி : தன்னம்பிக்கை
அடுத்தடுத்த படிகள் : விடாமுயற்சி
கடைசி படி : வெற்றி
!!!வாழ்க வளமுடன்!!!

பத்ம ப்ரியா