தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு-1 கப்
ரவை -1/4 கப்
அரிசிமாவு -1/2 கப்
வெங்காயம் பொடியாக அரிந்தது -1/4 கப்
பச்சைமிளகாய் பொடியாக அரிந்தது -2
கொத்துமல்லி பொடியாக அரிந்தது -2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள் -6
எண்ணை -பொரித்தெடுக்க
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கேழ்வரகு மாவுடன் ரவை, அரிசிமாவு, உப்பு, மற்றும் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நீர் சேர்த்து சிறிது கெட்டியான பதத்தில் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணை வைத்து காய்ந்ததும் மாவை பக்கோடாவாக கிள்ளி போட்டு நன்றாக பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சட்னி, சாம்பார் சேர்த்து பரிமாறவும். இந்த பக்கோடா மிகவும் சுவையாக இருக்கும்.
ஜெயந்தி