தேவையான பொருட்கள்: –
கேரட் -1
கோஸ் -100கிராம்
தக்காளி -2
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் -1
பூண்டு -4பல்
துளசி இலைகள் -6
வெள்ளை மிளகுத்தூள் -1/4டீஸ்பூன்
மெக்கரோணி -1/4கப்
உப்பு -தேவையான அளவு
செய்முறை: –
காய்கறிகளில் தக்காளி தவிர்த்து மற்றவைகளை பொடியாக அரிந்து எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து, தோல்நீக்கி எடுத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து பியூரியாக தயாரித்துக்கொள்ளவும்.
கடாயில் ஆலிவ் எண்ணைய்விட்டு அதில் பூண்டு, வெங்காயம் பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.
பிறகு இத்துடன் மற்ற காய்கறிகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கியபின் நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும் உப்பு, மிளகுத்தூள் மற்றும் மெக்கரோணி (சூடான நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து சேர்க்கவும்) அடுப்பை குறைத்து வைத்து நன்றாக கொதிக்கவைக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்து சிறிது கெட்டியான பதம் வரும்போது இறக்கிவைத்து துளசி இலைகள் தூவி பரிமாறவும்.
இந்தசூப் கார்போஹட்ரேட், நார்ச்சத்து, புரோட்டீன் யாவும் நிறைந்தும் கொழுப்புச்சத்து குறைந்தும் இருப்பதால் யாவருக்கும் ஏற்றது.
ஜெயந்தி