
# இந்திய சாட்சிய சட்டம்1872 பிரிவு 32 ன் படி மரண வாக்குமூலம் எனப்படுவது சட்டத்திற்கு புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையில் உள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ பெறுவது ஆகும்..
# ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும் போது சத்திய பிரமாணம் (oath) எடுத்துக்கொள்வது வழக்கம்..ஆனால் மரண வாக்குமூலம் தருபவர் சத்திய பிரமாணம் எடுக்க தேவையில்லை..ஏனென்றால் மரணிக்கும் தருவாயில் உள்ள மனிதன் பொய்யின்றி மெய்யே பேசுவார் என்று சட்டம் சொல்கிறது..
# நீதிபதி ( magistrate) முன்னிலையில் பெறப்படும் மரண வாக்குமூலத்திற்கே மதிப்பு அதிகம்..குறுகிய காலமே உள்ள நிலையில் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் மருத்துவர் பெறும் மரண வாக்குமூலம் செல்லும்..
# மரண வாக்குமூலம் தருபவர் இறந்த பின்பே அது செல்லுபடியாகும்..மரண வாக்குமூலம் தந்தவர் உயிர் பிழைத்துக்கொண்டால் அதற்கு சட்டத்தின் படி மதிப்பில்லை..
# மரண வாக்குமூலம் பதிவு செய்பவர், அதை தருபவர்களின் வார்த்தைகளை அப்படியே பதிவு செய்யவேண்டும்..புரியாத பட்சத்தில் விளக்கத்திற்காக சில கேள்விகளை கேட்கலாம்..சுய எண்ணங்களை அதில் பதிய வைக்க முயலக்கூடாது..
ஆர்த்தி பாஸ்கரன் வழக்கறிஞர்