Short Stories

உனக்குள் நான் – அத்யாயம் 2

அசோக் வீடு என்பதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும் . மெயின் கேட் விட்டு நுழைந்தால் இருபுறமும் போகன்வில்லா பூக்கள், ரோஜா தோட்டம், ஆர்கானிக் உரமிட்ட கீரை மற்றும் காய்கறி தோட்டம், நீச்சல் குளம், கார் கராஜ் உள்ளே அடுக்க பட்ட வரிசையில் விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, ஒரு சிறிய கோயில், என ஆடம்பரத்தின் உச்சம் இந்த வீடு. 12 அடி உயர கதவு திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய வரவேற்பு அறை ஒரு கல்யாணம் நடத்தலாம் அவ்வளவு பெருசு, அடுத்து ஹால், டைனிங் பக்கத்துல சமையல் ரூம், 3 அடுக்கு மாடிலிப்ட் வசதியுடன் ஒவொரு அடுக்கும் 7 ரூம் கொண்டது. அதில் ஒரு லைப்ரரி, சினிமா ஹால், indoor ஸ்டேடியம் அடங்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் தங்க அவுட் ஹவுஸ் போல சகல வசதியுடன் ஜொலிக்கிறது அரண்மனை. மங்களம் அம்மாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார். பாவை டிபன் சாப்பிட்டிருந்தாள் மங்களம் " ரேஷ்மா பாப்பாவை கூட்டி பொய் படுக்க வை " ரேஷ்மா " கம் ஆன் பேபி " பாவை "பாட்டி அப்பா " என்று தான் வரைந்த படத்தை காட்டி அப்பாவிடம் காட்டவேண்டும் என்று சைகை செய்தாள். மங்களம் " அப்பா வர லேட் ஆகும், நீ ட்ராயிங் பண்ணத என்கிட்ட கொடு நான் அப்பாகிட்ட காட்டறேன் நீ போய் தூங்கு குட்டி " பாவை " போ பாட்டி " என்று அழ தொடங்கிய பாவையை ரேஷ்மா சமாதானம் செய்து கூட்டி சென்றாள். சிறிது  நேரத்தில் ரேஷ்மா மங்களத்திடம் "பாப்பா தூங்கிட்டா, ஆன்ட்டி நான் சொன்னா கோபப்படாதீங்க, atleast வாரம் ஒரு நாளாவது பாப்பா அப்பா கூட இருந்தா சந்தோசமா இருப்பா. ப்ளீஸ் ஆன்ட்டி. நான் சாப்பிட்டு தூங்கறேன்" என்று உள்ளே உள்ள சிறிய டைனிங் ஹால் நோக்கி சென்றாள். மங்களம் இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு தன் தட்டில் இருந்த தோசையை சாப்பிட முடியாமல் கை கழுவினாள். இன்று அசோக்கிடம் பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். டைனிங் டேபிள் மேல் சாய்ந்து யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தூங்கி போனார் . வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை முடித்து கொண்டு அவுட் ஹவுஸ் சென்றனர். ரேஷ்மா மட்டும் பாவை ரூம்க்கு தூங்க சென்றாள். 12 .20 am  அசோக் வீட்டிற்கு வந்தவுடன் அம்மா டைனிங் டேபிளில் சாய்ந்து தூங்குவதை பார்த்து ''அம்மா" என்றழைத்தான். மங்களம் " வா அசோக் இது தான் வீட்டிற்கு வர நேரமா? வா சாப்பிடு"…

3 years ago

உனக்குள் நான் – அத்யாயம் 1

'பூம்பாவை ' - அவளுக்காக  காத்து இருந்தேன். எப்பவும்வந்துவிடுவாள்  இந்தநேரம், அவளுக்குப்பிடித்த choccolava  குக்கி வைத்துக்கொண்டு காத்துஇருக்கிறேன் . அவளொரு குட்டிதேவதை. அவள் கண்களில் உள்ள வெளிச்சம்…

3 years ago

நான் வரைந்த தூரிகை 3

சித்ரிதா ஹச்.எம் அறையை அடையும்போது, அதிதியும் அவள் தந்தையும் அங்கே வருவதை கண்டாள். அவர்களை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு கடமையே கண்ணாக ஹச்.எம் ரூமிற்குள்…

3 years ago

நான் வரைந்த தூரிகை 2

அந்த ரூமின் ஒரு பக்கம் சின்சானும், டோராவும் தலை கீழாக தொங்கிக்கொண்டிருக்க, மற்றொரு பக்கம் டாமும் ஜெர்ரியும் கை வேறு, கால் வேறாக விழி பிதுங்கி நிற்க,…

3 years ago

ஓ மனமே..ஓ மனமே…

"கௌதம்.. கௌதம்..நீங்க வந்து அரை மணி நேரம் ஆகுது.. இதுவரைக்கும் ஒரு வார்த்தை கூட பேசல.. இந்த மாசத்துல இது மூணாவது செஷன் ஆனா நீங்க இன்னும்…

3 years ago

திருவிழா பரிசு

அம்மா  கண்மணி பாப்பாவுக்கு  வாங்கிய  வளையலை  எங்கு  வைக்கிறது? சமையற்கட்டில்  பம்பரமாய்  சுழன்ற  பாமாவின்  கவனத்தை சிதறடித்தது  அவள்  மகன்  கார்த்தியின்  குரல். ஏழு ஆண்டுகள்  கழித்து …

3 years ago

தாத்தாவின் ரேடியோ

தாத்தாவின்   அறையின்  ஓரத்தில்  மிகவும்  கம்பீரமாய்  அமர்ந்திருந்தது அவரது வெளிர் பச்சை நிற ரேடியோ.தாத்தா அதற்கு தரும் மரியாதையை  வேறெந்த அஃறினை பொருளும் இந்த வீட்டில் பெற்றதில்லை.இவ்வளவு…

3 years ago

நான் வரைந்த தூரிகை- 1

தூரிகை 1 சென்னை – 2019 ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாள் அடி நெஞ்சில்…

3 years ago

ஒரு கோப்பை தாய்மை

அசைய கூட நேரமில்லாத அலுவலகப் பரபரப்பு.. நிமிர்ந்து பார்த்த போது மணி நாலரையை நெருங்கி விட்டிருந்தது. சீட்டிலிருந்து எழுந்து லேசாக கழுத்து முதுகெல்லாம் அசைந்து கொடுத்தபடி சுசீலாவிடம்…

3 years ago

காற்றே என் வாசல் வந்தாய்!

அந்த காலியான நெடுஞ்சாலையில் மிக வேகமாக சிவப்பு நிற கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதை ஓட்டியபடி மியூசிக் சிஸ்டத்தில், 'என் ஃபியூஸும் போச்சே..'என்ற பாடலை ஃபுல் வால்யுமில் …

3 years ago