அந்தி சாயும் நேரம்
அரையிருள் போர்த்திய வானம்
அங்குமிங்கும் அலைபாயும் காலம்
அமைதியாய் ஓர் நங்கை..!
அலைபாயும் மனதை
அடக்கும் வழி தோன்றாது
அச்சுறுத்தும் காலங்களை,
அற்பமான மனிதர்களை
அறிந்ததினால் ஏற்ற ஏமாற்றங்களை
அனிச்சையாய் விழுங்கியபடி
அசராமல் முன்னேற
அழிவில்லா வழி தேடி
அமைதியாய் ஓர் நங்கை.!
அயராத நம்பிக்கையோடு
அழகான வாழ்வு நோக்கி
அசாத்திய அறிவின் தெளிவால்
அமைதியாய் ஓர் நங்கை.!
-அயராத நம்பிக்கை நங்கை
ராஜலட்சுமி நாராயணசாமி