அந்த கால பெண்களை விட
இந்த கால கட்டத்தில் நிறைய பெண்கள் குழந்தையின்றி இருக்கும் நிலையை சந்தித்து வருகின்றனர்…..
இந்நிலைமை ஏன் இவ்வாறு உருவானது என்று பார்க்கலாம்.

இயற்கையாக பெண்ணின் கர்ப்பபை நலமுடன் தான் இருக்கும் என்பதை அறிவோம்.
ஒரு பெண் பிறக்கும் போதே தனது தாய்மை பெறும் பாக்கியமான கர்ப்பபை உறுப்பான கர்ப்பம் தரிக்கும் திறனோடு தான் ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கின்றது. அந்த குழந்தை வளர்ந்து பருவ நிலையை அடையும் போது தாய்மை அடைவதற்கான தகுதியின் ஆரம்பம் தொடங்குகிறது …….
☘️☘️☘️☘️☘️☘️☘️
அறிவியல் ரீதியாக நமது கர்ப்பபை ( uterus) எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை காணலாம்

கர்ப்பபை நாம் பிறக்கும் போதே இரண்டு சினைப்பை முட்டைகளுடன் நமது அடிவயிற்று பகுதியில் அமைந்துள்ளது.
இந்த சினைப்பையில் உள்ள முட்டைகளில் ஒன்று முதிர்ச்சி அடைந்து மாதா மாதம் உடைந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய் காலம் என்கிறோம்.
இந்த மாதவிடாய் காலம் முடிந்தவுடன் பெண்ணின் அடுத்த கட்ட நிகழ்வான கருமுட்டை வளரும் தன்மையை பெறும். அந்த கருமுட்டை மாதவிடாய் நிகழ்ந்த நாளில் இருந்து பதினான்காவது நாளில் பெண்ணின் கர்ப்ப பையில் உள்ள பெலோப்பியன் டியூப்பில் ஆணின் விந்துக்காக காத்திருக்கும். அப்பொழுது தம்பதிகள் இணையும் பொழுது அந்த கரு முட்டையில் லட்சக்கணக்கான விந்து துளிகளில் உள்ள உயிரணுக்கள் பெண்ணின் பிறப்பு வாயில் வழியாக சென்று கர்ப்பபை வாயில் வழியாக நீந்தி செல்லும்.
அப்போது நிறைய உயிரணுக்கள் மடிந்து சில உயிரணுக்கள் மட்டும் கருமுட்டையை அடையும் அதுவே கருவின் முதல் கட்டமாக மாறி அந்த கரு ஆணின் உயிரணுவுடன் இணைந்து ஒரு பந்து போன்ற வடிவத்தை பெற்று பெலோப்பியன் டியூப்பில் இருந்து உருண்டு வந்து கர்ப்ப பையில் தங்கி குழந்தைக்கான வளர்ச்சி தொடங்கி விடும். நான்கு அல்லது ஐந்து மாதங்களில் குழந்தை முழு உருவத்தை அடைந்து தாயின் வயிற்றில் கை கால் அசைத்து நன்கு வளர தொடங்கி, பத்தாவது மாத முதல் வாரத்தில் தாங்க முடியாத வலியுடன் இயற்கை முறையில் சுகப்பிரசவம் நடைபெறும்.
இதுவே உலகிற்கு மருத்துவ முறைகள் வருவதற்கு முன்னர் நடைபெற்று வந்தது…
நமது முன்னோர்கள் அந்த காலத்தில் நிறைய சுகப்பிரசவம் நடை பெற எப்படி வாழ்ந்தார்கள் எப்படி உணவு முறைகளை பின்பற்றி வந்தார்கள் என்பதை பார்ப்போம்
காலையில் எழுவதால் இயற்கையான தூய்மையான காற்றை சுவாசித்தனர்.
முன்னோர்கள் குழந்தையின்மைக்கு கண்ட தீர்வுகள்
நாம் வாழ்வது நாகரீகமான அவசர வாழ்கை முறையாகும்.
அதனால்தான் தற்போது அனைத்து தம்பதிகளையும் செயற்கை முறையில் கருத்தரிக்கும் மையங்களில் காண முடிகிறது. இது மிக மிக மோசமான நிலையாகும் இவ்வாறு சென்று கொண்டு இருந்தால் எதிர்காலத்தில் சந்ததிகள் இல்லாமல் போகும் தன்மை உருவாகும் ……..
☘️ நாம் சரியான முறையில் தூங்காமல் இருப்பது தூக்கம் வந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் டிவி மொபைல் என்று மூளையை செலவிடுவது நமது பெரிய தவறாகும்.
☘️
️உடல் உழைப்பின்றி வேலையாட்கள் வைத்து விட்டு நொறுக்கு திண்பண்டங்களை சாப்பிடுவது ஓய்வெடுப்பது என்று உடல் உழைப்பின்றி போனதால் உடல் உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெறாமல் போய் விட்டது …
☘️🥪


🧈 வீட்டில் பாரம்பரியமான உணவுகளை சமைத்து சாப்பிடாமல் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் உடல் பருமன் அடைந்து கர்ப்பபை பிரச்சனைகளை சந்திக்கின்றனர் மற்றும் ஆண்களும் தொப்பை பெறுத்து ஆண்மையை இழக்கிறார்கள்.
☘️

தம்பதிகள் இருவரும் தற்போது வேலைச்சுமையை சுமப்பதால் இருவரும் தனது சுகங்களை ரசித்து ரசித்து இன்பத்தை பெறாமல் கடமைக்கு தாம்பத்யம் நடைபெறுவதால் அங்கு ஆரோக்கியமான குழந்தையை பெற முடியாமல் போக இதுவும் ஒரு காரணம் ஆகும்…
☘️

கணவன் மனைவி இருவரும் அதிக கவலை, கோபம், கண்ணீர் என்று அதிக நேரம் இருப்பது அந்த நேரத்தில் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக குழந்தைகள் ஊனமாக பிறக்கவும் வாய்ப்புகள் அதிகம்
☘️
இன்றைய சூழலில் நிறைய ஹார்மோன் மாற்றம் செய்யபட்ட இறைச்சி மற்றும் உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடலின் ஹார்மோன் மாற்றங்கள் என்று இன்னும் நிறைய காரணங்கள் உள்ளன ..
நாம் பின்பற்ற வேண்டியவை…
குழந்தை பாக்கித்திற்கான சில தீர்வுகள் :
செயற்கை கருத்தரிப்பு என்பது அனைவருக்கும் தெரிந்து நடக்கும் தாம்பத்யம் போன்றது அதில் சுவாரசியம் கிடைக்காது அதனை புரிந்து நமது வாழ்கை முறையில் சிறு சிறு மாற்றம் செய்தாலே நல்ல ஆரோக்யமான குழந்தை பிறக்கும்….
அனைவருக்கும் குழந்தை என்றால் ஆனந்தமே…! அந்த குழந்தை வரத்தை பெற அக்குபிரஷர் முறையிலும் விதை மருத்துவ முறையிலும் சிகிச்சை செய்து தீர்வை காண்போம்.
அக்குபிரஷர் முறையில் சரி செய்வது எவ்வாறு…?

முறையாக சிகிச்சை பெற அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி அவரின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்ளுங்கள்.
அக்குபிரஷர் சிகிச்சை முறையில் நீங்களே வீட்டில் அழுத்தம் தந்து பயன் பெறுங்கள். தரையில் நேராக படுத்து கொள்ளவும். தொப்புளில் இருந்து உங்கள் கைகளில் உள்ள நான்கு விரலை கொண்டு அளந்து புள்ளி உள்ள அந்த இடத்தில் அழுத்தம் தாருங்கள். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் குழந்தை பிறக்கும் தகுதியை வளர்க்கும் புள்ளியாகும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே இருக்கும் படத்தை நன்கு கவனித்து செய்யுங்கள்.
விதை மருத்துவத்தில் குழந்தை தங்குவதற்கான சிகிச்சை முறையை காணுங்கள்

விதை மருத்துவத்தில் நமது உள்ளங்கையில் அடி பகுதில் சிறிதளவு பச்சைபயறை வைத்து பேப்பர் டேப்பால் பேக் பண்ணினால் பச்சை பயிரின் தன்மை குளிர்ச்சியாகும் அதில் பைபர்’ புரோட்டீன்,விட்டமின் A,B,E, மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து, போன்ற நிறைய சத்துக்கள் அடங்கி உள்ளதால் அதன் சக்தியானது பெண்களின் கர்ப்பபை ஹார்மோன் சுரப்பியை சமநிலையில் வைக்கும், ஆணின் விந்து தன்மையை பெருக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கை மற்றும் நீநந்தும் சக்தியை மேம்படுத்தி குழத்தை உருவாக வழிவகை செய்யும் செய்து பலன் பெறுங்கள்.
அடுத்தவாரத்தில் கர்பப்பை நீர் கட்டிகள் ஏன் உருவாகின்றது என்பதை பார்ப்போம்
நன்றி 


ஹீலர் சசிகலா அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவம்