உளுத்தம்பருப்பு லட்டு

0
296

Urad Dal Laddu (సున్నుండలు, உளுத்தம் ...

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு    -250 கிராம்

வெல்லம் பொடித்தது  -400 கிராம்

ஏலப்பொடி   -1/2 டீஸ்பூன்

பால்கோவா ( சர்க்கரை சேர்க்காதது )  -250 கிராம்

முந்திரி துண்டுகளாக்கியது   -10

காய்ந்த திராட்சை  -20

நெய்  -150 கிராம்

செய்முறை:

உளுந்தை ½ மணி ஊறவைத்து பிறகு நன்கு அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ளவும். அடிகனமான கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு இத்துடன் பொடித்த வெல்லம், பால்கோவா, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கிளறி இறக்கிவைத்து சிறிது ஆறியதும் லட்டாக செய்து வைத்துக்கொள்ளவும். இந்த லட்டு மிகவும் ருசியாகவும் சத்து நிரம்பி இருக்கும்.

அடுத்த சுவையான உணவுடன் சந்திப்போம் !

ஜெயந்தி