உனக்குள் நான் – அத்யாயம் 2

0
146

285 Best BEAUTY OF A CHILD IN A PAINTING images | Painting ...அசோக் வீடு என்பதை விட அரண்மனை என்றே சொல்ல வேண்டும் . மெயின் கேட் விட்டு நுழைந்தால் இருபுறமும் போகன்வில்லா பூக்கள், ரோஜா தோட்டம், ஆர்கானிக் உரமிட்ட கீரை மற்றும் காய்கறி தோட்டம், நீச்சல் குளம், கார் கராஜ் உள்ளே அடுக்க பட்ட வரிசையில் விலை உயர்ந்த கார்களின் அணிவகுப்பு, ஒரு சிறிய கோயில், என ஆடம்பரத்தின் உச்சம் இந்த வீடு.

12 அடி உயர கதவு திறந்து உள்ளே நுழைந்தால் பெரிய வரவேற்பு அறை ஒரு கல்யாணம் நடத்தலாம் அவ்வளவு பெருசு, அடுத்து ஹால், டைனிங் பக்கத்துல சமையல் ரூம், 3 அடுக்கு மாடிலிப்ட் வசதியுடன் ஒவொரு அடுக்கும் 7 ரூம் கொண்டது. அதில் ஒரு லைப்ரரி, சினிமா ஹால், indoor ஸ்டேடியம் அடங்கும். வீட்டில் வேலை செய்பவர்கள் தங்க அவுட் ஹவுஸ் போல சகல வசதியுடன் ஜொலிக்கிறது அரண்மனை.

மங்களம் அம்மாள் டைனிங் டேபிளில் அமர்ந்து இருந்தார். பாவை டிபன் சாப்பிட்டிருந்தாள்

மங்களம் ” ரேஷ்மா பாப்பாவை கூட்டி பொய் படுக்க வை ”

ரேஷ்மா ” கம் ஆன் பேபி ”

பாவை “பாட்டி அப்பா ” என்று தான் வரைந்த படத்தை காட்டி அப்பாவிடம் காட்டவேண்டும் என்று சைகை செய்தாள்.

மங்களம் ” அப்பா வர லேட் ஆகும், நீ ட்ராயிங் பண்ணத என்கிட்ட கொடு நான் அப்பாகிட்ட காட்டறேன் நீ போய் தூங்கு குட்டி ”

பாவை ” போ பாட்டி ” என்று அழ தொடங்கிய பாவையை ரேஷ்மா சமாதானம் செய்து கூட்டி சென்றாள்.

சிறிது  நேரத்தில் ரேஷ்மா மங்களத்திடம் “பாப்பா தூங்கிட்டா,

ஆன்ட்டி நான் சொன்னா கோபப்படாதீங்க, atleast வாரம் ஒரு நாளாவது பாப்பா அப்பா கூட இருந்தா சந்தோசமா இருப்பா. ப்ளீஸ் ஆன்ட்டி. நான் சாப்பிட்டு தூங்கறேன்” என்று உள்ளே உள்ள சிறிய டைனிங் ஹால் நோக்கி சென்றாள்.

மங்களம் இன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு கொண்டு தன் தட்டில் இருந்த தோசையை சாப்பிட முடியாமல் கை கழுவினாள். இன்று அசோக்கிடம் பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

டைனிங் டேபிள் மேல் சாய்ந்து யோசித்துக்கொண்டே தன்னை அறியாமல் தூங்கி போனார் .

வேலை செய்பவர்கள் அவரவர் வேலையை முடித்து கொண்டு அவுட் ஹவுஸ் சென்றனர். ரேஷ்மா மட்டும் பாவை ரூம்க்கு தூங்க சென்றாள்.

12 .20 am  அசோக் வீட்டிற்கு வந்தவுடன் அம்மா டைனிங் டேபிளில் சாய்ந்து தூங்குவதை பார்த்து ”அம்மா” என்றழைத்தான்.

மங்களம் ” வா அசோக் இது தான் வீட்டிற்கு வர நேரமா? வா சாப்பிடு”

அசோக் ” ட்ரெஸ் மாத்திட்டு வரேன் டூ மினிட்ஸ்” என்று ரூம் சென்று ஷார்ட் , டீஸ் மாற்றி வந்தான். உயரம் 6’2″ உயரத்துக்கு ஏற்ற உடல்வாகு, கோதுமை நிறம், நேரான நடை 31 வயது ஆணழகன் அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை அவன் சிரித்தால் அழகாக இருக்கும் ஆனால் அவன் சிரிப்பை தொலைத்து 3 வருடங்கள் ஓடி விட்டன.

அசோக் “ஏன் அம்மா வெயிட் பண்ணறீங்க, தூங்கலாம் இல்ல உடம்ப கெடுத்துக்காதீங்க , சாப்பிட்டீங்களா?”

மங்களம் ” சாப்பிட்டேன் டா நீ சாப்பிடு, டெய்லி இப்படி லேட்டா வர காலைல சீக்கிரம் கிளம்பிடுறே, நீ என்னோட பையன்  நான் உன்னை எப்போ பார்க்கறது, பேசறது நீயே எனக்கு டைம் கொடு” என தட்டில் தோசை வைத்துக்கொடுத்தார்

அசோக் “அம்மா கொஞ்சம் வேலை அதிகம் சாரி , சொல்லுமா என்ன பேசணும் ” தட்டை வாங்கிக்கொண்டே.

மங்களம் ” இன்னைக்கு பாவையை ஹாஸ்பிடல் கூட்டி போனேன், ஸ்பீச் தெரபி தர, டாக்டர் வீட்டில் அவளோட நிறைய பேச சொன்னார், நீ அவளை பார்க்கறது இல்லேன்னு, பேசறது இல்லேன்னு ரொம்ப பாவை ஏங்கறாள்,நீ அவளுக்கு  என்ன பண்ண போறே. அவ பிறக்கும் போது மீரா செத்து போனது அவளோட தப்பு இல்லையே, அவளுக்கு ஏன் தண்டனை கொடுக்கற.”

அசோக் “அம்மா நான் அப்படியெல்லாம் நினைப்பேனா, டைம் இல்ல அவ்வளவுதான்”

மங்களம் “நீ பண்ணறது தப்பில்லன்னு சொல்லற, இல்லையா ”

அசோக் ” அம்மா என்ன சொல்ல வரீங்க”

மங்களம் ” நீ கடைசியா பாப்பாவை பார்த்து பேசி எவ்வளவு நாள் ஆச்சுன்னு சொல்லு”

அசோக் “ரீசெண்டா சினிமா பார்த்தோமே நம்ம செகண்ட் பிளோரில் ”

மங்களம் “அது போன வாரம் அப்பவும் நீ தூங்கிட்டே பாப்பா தான் கீழ தனியா இறங்கி வந்தா ”

அசோக் “அம்மா என்ன செய்ய சொல்லறீங்க”

மங்களம் ” எனக்கு வயசு 53 இந்த வயசுல எல்லாரும் ரிலாக்ஸ் பண்ணுவாங்க நா உனக்காக கவலை பட்டுக்கிட்டு இருக்கேன்”

அசோக் ” அம்மா புலம்பாதீங்க என்ன பண்ணனுமோ அதை மட்டும் சொல்லுங்க ”

மங்களம் ” நான் என்ன கேட்க போறேன் ஒரு கல்யாணம் பண்ணிக்கோ”

அசோக் ” ஒரு முறை அது ஆச்சு அதுவும் நீங்க கம்பெல் பண்ணி முடிசீங்க என்னாச்சு ஒரே வருசத்துல போய் சேர்த்துட்டா, உண்மையை சொல்லனும்னா என்னால அவளை மறக்க முடியல இன்னோர் கல்யாணத்த பத்தி நினைக்க. (……தொடரும்)

சாய் கிருஷ்ணா

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments