உனக்குள் நான் – அத்யாயம் 1

0
244

Man and woman dancing in a modern interior

‘பூம்பாவை ‘ – அவளுக்காக  காத்து இருந்தேன்.

எப்பவும்வந்துவிடுவாள்  இந்தநேரம், அவளுக்குப்பிடித்த choccolava  குக்கி வைத்துக்கொண்டு காத்துஇருக்கிறேன் .

அவளொரு குட்டிதேவதை. அவள் கண்களில் உள்ள வெளிச்சம் , அவள் புன்னகையில் உள்ள மின்னல் அவளை நாள் முழுவதும் பார்த்து கொண்டு இருக்கலாம் .

இந்த மூன்று மாத காலத்தில் அவளை பற்றி நான்  அறிந்தது  அவள் ஒரு தாயில்லா  குழைந்தை, அவள் தந்தை மிக பெரிய பணக்காரர்.

அவள் வருவதற்குள் என்னை பற்றி ……

நான் ராதிகா வயது 27 இந்த ஓர் ஆண்டுக்குள் என் தாயை பறிகொடுத்தவள் என் தந்தை  நான் சிறு வயதில் இருக்கும்போதே வேறு ஒரு குடும்பம் அமைத்து கொண்டு எங்களை விட்டு விட்டார். நானும் என் அம்மாவும் சேர்ந்து ஆரம்பித்த குட்டி பேக்கரி தான் என் சொத்து.

எனக்கு ஒரு நண்பன் சிறு வயது முதல், என்னுடைய ஒரே உறவு மற்றும் உதவிக்கரம் அவன்தான் கேசவ்.

எங்கள் பேக்கெரிக்கு முன்பாக புதிய cafeteria  தோன்றி உள்ளதால் எங்கள் பேக்கரி வாடிக்கையாளர்கள் குறைந்து விட்டனர். அதனால் கொஞ்சம் லாஸ், அதனால் மூன்று மாதமாக வாடகை கொடுக்கவில்லை. எப்பவும் ஓனர் வந்து விடுவார் பதிலை தயார் படுத்தி வைக்க வேண்டும் .

அதோ அந்த தேவதை வந்துவிட்டாள் இன்று வேறு ஒருவர் அழைத்து வந்து இருந்தார்கள்.

“ஹாய் குட்டி – ஏன்டா லேட் ”

“ஹாஸ்பிடல் – க்ராண்ட்மா – லேட் ” பாவை. அவளுக்கு கொஞ்சம் கோர்வை யாக பேசவரவில்லை

“ஓ இது உங்க பாட்டியா ” நான்

அந்த அம்மாள் ” ஆமாம் ” என்றார்கள். “நீ தான் ராதிகா வா, பாவை உன்னை டெய்லி பார்க்க வருவாள் போலிருக்கு” அவர்

” ஆமாம் ஆண்ட்டி ஹாஸ்பிடல் எதுக்கு போனீங்க , பாவைக்கு உடம்பு சரியில்லையா ” நான்

” ஆமாம்  அவளுக்கு 3  வயது , இன்னும் சரியாக பேச வரவில்லை அதான் consultation போய் வந்தோம் ” அவர்

” டாக்டர் என்ன சொன்னார் ” நான்

” ஏக்கம் தான் கவனமாக இருக்க சொன்னார் , சரி பார்க்கலாம் ” கிளம்பினார்.

பாவைக்கு பை சொல்லி கவுண்டர் க்கு சென்றேன்.

என் மன அலை – நான் இந்த வயதில் அம்மாவை மிஸ் பண்ணறேன் ஆனால் பாவம் பாவை அம்மா அன்பை துளி கூட அனுபவிக்க வில்லை. சிலருக்கு சிறிய வயதில் ஏன் நாம் கஷ்ட படுகிறோம் என்று தெரியாமலே படுகிறார்கள். பணம் எவ்வளவு இருந்தால் என்ன இந்த பிஞ்சு நெஞ்சை சரி செய்ய முடியுமா? கடவுளே இவ்வளவு குட்டி பெண்ணுக்கு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்யப்பா. என் பிராத்தனை நிறைவேறுமா காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

என்னை அறியாமல் அவள் வசமாகி கொண்டு இருக்கிறேன்.

அடுத்த பகுதிக்குள் ஒரு சிறிய introduction .

பூம்பாவை – அசோக் / மீரா வின் பெண்.

அசோக்  – மிக பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தின் தலைவன், பல கொடிகளின் அதிபதி, மங்களம் / late ஏழுமலை அவர்களின் ஒரே புதல்வன்.  பூம்பாவை பிறக்கும் போது டெலிவரி சிக்கலில் இறந்துவிட்ட காதல் மனைவி. மனைவியின் நினைவுடன், விரக்தியுடன் 3 வருடங்களாக  தன் பிசினஸ் மட்டும் வாழ்வதற்கு ஒரே குறிக்கோளாய் வாழ்ந்து வருபவன்.

கேசவன் – சிரித்தால் கன்னத்தில் குழி விழும் நடிகர் பிரபு போல இருப்பான். எனக்கு பேக்கரியிலும் துணை வாழ்க்கையில் ஒரே உறவு நண்பன்.

ரேஷ்மா – பூம்பாவையின் caretaker.

புஷ்பா – அசோக் வீட்டில் சமையல் செய்யும் அம்மா.

அழகர் – அசோக் வீட்டில் மேனேஜர் புஷ்பாவின் கணவன்.

மேற்கொண்டு வரும் கேரக்டர் அந்தந்த சாப்டரில் intro தருகிறேன். (…..தொடரும்)

 

சாய் கிருஷ்ணா