தீர்வு என்ன?

6
205

Young curvy woman rejecting someone showing a gesture of disgust.

உங்கள் ஆடைகளில் கட்டுப்பாடு கொண்டு வாருங்கள். உங்கள் கட்டழகை கடை விரிக்காதீர்கள்!

இப்படி ஒரு வாசகத்துடன் 3-4 வயது பெண் குழந்தைகளின் புகைப்படங்கள் (நவீன உடைகள், பர்தா அணிந்த குழந்தைகள்) இணையத்தில் காணக் கிடைத்தது.

எனில், அடிக்கும் வெயிலில் அனலாய் கொதிக்கும் நாட்டில் தலை முதல் கால் வரை முக்காடிட்டு புழுங்கிச் சாக வேண்டுமா பெண்ணினம்?

பெண்ணாய் பிறந்ததற்கு கிட்டும் சாபமா இது?

ஏன் எப்போதும் பெண் பிள்ளைகளையே கட்டுப்படுத்துகிறோம்?

Young curvy woman keeping two arms crossed, denial concept.

ஏன் அவர்களின் அங்கங்கள் கட்டழகாக பார்க்கப்படுகின்றன?

இவையெல்லாம் கலாச்சாரத்தின் பெயரால் நிகழும் நம் பாரம்பரியத்தின் விளைவா?

உலகிலேயே குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகமிருக்கும் நாடு இந்தியா என்பதை இதனோடு பொறுத்திப் பார்க்க வேண்டாமா?

இளமை துள்ளும் நங்கைகளும் நீச்சலுடையில் சாதாரணமாக நடமாடும் மேற்கு நாடுகளின் ஆண்களுக்கு ஏன் வன் புணரத் தோன்றுவதில்லை?

பெண்ணே தெய்வம் என நாடு முதல் நதி வரை பெயரிட்டு அன்னை ஓர் ஆலயமாக ஆராதிக்கும் இந்திய கலாச்சார சூழலில் ஏன் இவ்வளவு வன்புணர்வுகள்?

பிறந்த 3 நாள் குழந்தை முதல், 90 வயது மூதாட்டி வரை வன் புணரப்பட்ட பெண்களின் பட்டியல் நீள்கிறதே?

இவையெல்லாம் பெண்களின் தவறா இல்லை இந்திய ஆண்களின் பாலியல் வளர்ச்சியா?

ஆண் ஆண்டான் பெண் அடிமை என்பதன் நீட்சியா?

இப்படியொரு கேவலமான மனித இனத்தை உருவாக்குவது தான் இந்தியாவின் கலாச்சார பண்பாட்டு விழுமியமா?

Young curvy woman doing a denial gesture Premium Photo

இவ்வளவு கேள்விகளுக்கும் என்ன தான் பதில்? பெண்கள் என்ன செய்ய வேண்டும்? ஆண் என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வொரு நாளும் கொடூரமாய் நிகழும் பாலியல் அத்துமீறல்களைத் தடுக்கும் நிரந்தரமாய் நிறுத்தும் வழி தான் என்ன?

உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த வாரம் அலசுவோம்!

-நன்றி

ராஜலட்சுமி நாராயணசாமி
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
6 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Jansi

Don’t change the clothes. Change the mindset. Stop objectifying women.

அனிதா செல்வம்

ஆற்றாமையுடன்‌, உள்ளத்திலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள்..

PK. Pavendar

Gud write up

Akilavaikundam

இது சிலரோட மனநோய்

C Puvana

உடை அணிவதில் சுதந்திரம் பெண்களுக்கும் நிச்சயமாகத் தேவை. தனக்குப் பிடித்த மற்றும் தன் உடலுக்கேற்ற உடையை அவள் ஏன் அணியக் கூடாது? மாற்றங்களைக் கொண்டு வருவோம்.
புவனா
12/072020

பெண் பிள்ளையைப் பொத்திப் பொத்தி வளர்ப்பதை நிறுத்தி ஆண் பிள்ளைகளின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. அவள் வெறும் உடலல்ல. அவளுக்கும் மனம் என்று ஒன்றிருக்கிறது என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். இதை ஒவ்வொரு அம்மாவும் செய்ய வேண்டும்.