அயராத நம்பிக்கை நங்கை

1
163

பெண் எந்த நட்சத்திரத்தில் ...

அந்தி சாயும் நேரம்
அரையிருள் போர்த்திய வானம்
அங்குமிங்கும் அலைபாயும் காலம்
அமைதியாய் ஓர் நங்கை..!

அலைபாயும் மனதை
அடக்கும் வழி தோன்றாது
அச்சுறுத்தும் காலங்களை,

அற்பமான மனிதர்களை
அறிந்ததினால் ஏற்ற ஏமாற்றங்களை
அனிச்சையாய் விழுங்கியபடி
அசராமல் முன்னேற
அழிவில்லா வழி தேடி
அமைதியாய் ஓர் நங்கை.!

அயராத நம்பிக்கையோடு
அழகான வாழ்வு நோக்கி
அசாத்திய அறிவின் தெளிவால்
அமைதியாய் ஓர் நங்கை.!

-அயராத நம்பிக்கை நங்கை

ராஜலட்சுமி நாராயணசாமி
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Anonymous

அழகான கவிதை வரிகள். படமும் அழகு. வாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி.

புவனா,
13/07/2020