சிசு

8
187

sorrow kids baby

அவ்வரக்க விரல்கள்

நீண்டெனது மார்பழுத்திய போது,

அது மார்பென்பதே அறியாத பேதை நான்

ஆணுக்கு உணர்ச்சி தூண்டும்

காமப் பொருளென்றோ

சிசுவுக்கு உணவூட்டும் அமுதசுரபி

எனவோ அறியாத அறியாமை நான்

 

துளையிட்டு உள்நுழைந்த அக்கொடூரனின் அங்கம்..

அவ்வங்கம் ஆதிக்கம் செலுத்தவென்றே படைக்கப்பட்டதென்

பிறப்புறுப்பு என்பதை அறியவில்லை நான்

சிறுநீர் கூட கொஞ்சமாய் ஒழுகும்

சிறுதுவாரமாய் இன்னும் வளரக்கூட இல்லாத அவ்விடத்தில்

அவன் அழுத்தம் கொடுத்த ரணத்தில்

உயிர்பிளக்கும் வலி சுமக்கும் போது..

 

அது குழந்தை ஈன்றெடுக்கும்

சிறப்புறுப்பு என்பதறியாத குழந்தை நான்

 

ஏதும் தெரியாத எனக்கு

அவன் காட்டிய போலிப் பாசமும்

இனிப்பூட்டும் மிட்டாய்களும்

மட்டுமே தெரிந்தன.

 

அதன் பின்னிருந்த கோரமுகமும்

காமுகமும் அறியாத சிறு சிட்டு நான்

 

இவையெல்லாம் அறிந்தவன்

நான் குழந்தையென்பதை

எனக்கு மரணவலி வலிக்குமென்பதை

கபடமில்லா என் சிரிப்பு சிதறிவிடுமென்பதை

அறிந்தும் மறந்துவிட்டான்.

 

அறிந்ததை மறக்காதிருக்க

அடக்கியாளும் எண்ணம் துளிர்க்காமலிருக்க

ஆண்மையை காட்டாதிருக்க

மோகம் அடக்க

காமம் அடக்க

ஒழுக்கம் ஓம்ப

சொல்லிக் கொடுங்கள்

ஆண் சிசுவிற்கு

 

என் பெயரால்

கூண்டிலிட்டுப்

பூட்டாதீர்கள்

பூந்தளிர்களை

– இப்படிக்கு வன் புணர்வால் உயிர் பிரிந்த பெண் குழந்தை

image credit: needpix.com

ராஜலட்சுமி நாராயணசாமி

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
8 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
மீராஜோ

இது வரிகள் அல்ல….
மனித இனத்தின் ……

லதாகணேஷ்

அருமை தங்கம்.. உணர்வுகள் நிறைந்த வலிகள் சுமந்த வரிகள்..

Nandhine

Road accident mari adikadi indha ranatha ipo kekarom…. Thaimargal oda valarppa samudhayathoda aani ver azhugi pocha therla….. Manam aaramatengudhu…….

Nithya Mariappan

வலியுடன் கூடிய வார்த்தைகள்..
சிறுமிகளைக் கூட காமக்கண் கொண்டு நோக்கும் விலங்குகளை கொண்ட இச்சமூகத்துக்கு தனிமனித ஒழுக்கத்தின் முக்கியத்துவம் இனியாவது புரிந்தால் நலம்…

கவிஅன்பு

அருமை இந்த ஆட்களுக்கு தண்டனை குழந்தையை பெற்ற அன்னை தான் கொடுக்க வேண்டும் அப்ப தெரியும் இந்த சமூகத்திற்க்கு பெண்ணின் சத்தி என்ன என்பது

சம்யுக்தா மதி

அருமை சகோ

Prasha

Pradga Your comment is awaiting moderation. This is a preview, your comment will be visible after it has been approved.
July 5, 2020 at 7:03 am
இந்த வரிகள் மேக் மீ க்ரை… இப்போ கேள்வி படும் சம்பவங்களோடு இந்த கவிதை வரிகள் இணைக்கும் போது எத்தனை நிதர்சனம்… வாழ்த்துக்கள் மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்…

Pradga

இந்த வரிகள் மேக் மீ க்ரை… இப்போ கேள்வி படும் சம்பவங்களோடு இந்த கவிதை வரிகள் இணைக்கும் போது எத்தனை நிதர்சனம்… வாழ்த்துக்கள் மிகவும் உணர்வுபூர்வமான வரிகள்…