மனதின் ஊஞ்சலாட்டம்

0
179

Outdoor portrait in profile of a thoughtful teenage girl Premium Photo

மனதின் வலி மரணம் நிகழும் முன்
என் மனக் கூச்சலின்
சாராம்சத்தை
குற்றவாளி கூண்டில்
ஏற்றுகிறேன்..

உறக்கத்தை தழுவிருந்த
மனசாட்சியை துயில்
எழுப்பி எதிராளி கூண்டில்
நிற்க வைக்க முயல…

வானில் பறக்கும் பறவையின்
கானல்  பிம்பத்தை
சாட்சி கூண்டில் ஏற்ற.

ஒப்பனை தடவிய சொற்களோ
மிடுக்காக திமிருடன்
நிமிர்ந்து நிற்க…

நிகழ்வுகளின் சாசனமும்
பிம்பத்தின்  சாட்சிகளும்
நிஜத்தின் கூச்சலுக்கிடையே
மெய்யின் சுயரூபம்
ஒதுங்கி மறைய
பொய்யான குற்றசாட்டு
கீரிடம் சூடியது…

என் மரணத்தின் முன்
மெய்யை  நிலை நாட்டி
மாயையை  கழுவேற்ற
அக்னிகுண்டத்தில்
கடுந்தவம் மேற்கொள்கிறேன்…-சசிகலா எத்திராஜ்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments