கொங்கனி சிக்கன் குழம்பு ( மஹாராஷ்டிரா)

0
283
Konkani Chicken Curry - Madhurasrecipe.com
தேவையான பொருட்கள்
* சிக்கன் – 1/4 கிலோ
* வெங்காயம் – 1 பெரிது (நீளவாக்கில் நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1/4 கப்
* பட்டை – 2 துண்டு
* அன்னாசிப்பூ – 2
* கிராம்பு – 3
* மிளகு – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் – 3/4 கப்
* உப்பு – தேவையான அளவு
* கொத்தமல்லி தழை – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை :
 வெறும் வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, மிளகு இவற்றை மிதமான தீயில் நன்றாக வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
அதே வாணலியில் சிறிது எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு சிவக்கும் வரை வதக்கவும்
பிறகு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து சிறிது சிவந்து வரும் வரை வதக்கி ஆற வைத்து பொடி செய்து வைத்த மசாலாவுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
வாணலி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கழுவி வைத்த சிக்கனை சேர்த்து வதக்கவும்.  5 நிமிடங்கள் நன்றாக வதக்கியதும் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா,  சிறிதளவு மிளகாய் தூள் சேர்த்து வதக்கி மிதமான தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து மீதமிருக்கும் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, தண்ணீர்  சேர்த்து நன்கு கலக்கி மூடி வைத்து 10 -15 நிமிடங்கள்  வேக விடவும்.
பிறகு நறுக்கி வைத்த கொத்தமல்லி சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.


பத்மப்ரியா