அப்பா…..

13
175

Family character design set 3

அப்பா போல்

அடுத்தவர் இருப்பாரா…..

கோபப்படுத்தினாலும்

குறை சொன்னாலும்

குற்றம் பார்த்தாலும்

அழவைத்தாலும்

நமக்கென்று ஒன்றென்றால்……..

உடனே துடிப்பது

உள்ளம் பதைப்பது

உயிர் வருத்துவது

அப்பாதானே……..

 

அப்பா…..

அப்பா…..என

அடிக்கடி

அழைத்தாலே

அப்பா நம்

அன்பு பிடியில்.

அப்பா எதிர்பார்ப்பது நம்மிடம்

அன்பு வார்த்தைகளை மட்டுமே

அம்மாபோல்

அன்பை காட்டத்தெரியாதவர்

அப்பா.

அம்மாவிற்கு இணையான

அன்பை  நம் வாழ்வில் ஊட்டத்தெரிந்தவர்

அப்பா.

மறைந்திருக்கும் அப்பாவின்

மடைகட்டிய அன்பை

உணர மட்டுமே முடியும்.

அதுதான் அப்பா………..

கனிவுடன்,

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
13 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
N G ANBALAGAN

Great in a simple words. Appa is unique and incomparable. Really I adore my father, who just passed away at 102.

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

நன்றி ஐயா.
ஆம் ஐயா நாம் ஒப்பிட்டு பார்க்கமுடியாத ஓருயிர்தான் அப்பா

அனந்த்

அருமையான கவிதை👌🏼👍

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

மகிழ்ச்சி சகோ

மிகவும் அருமையாக உள்ளது

Suryaprabha

அப்பா …உணர்ந்தேன்… கவிதை அருமை…வாழ்த்துகள் ஆண்டாள்..😊

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

மகிழ்ச்சி சூர்யப்ரபா. நானும் உணர்ந்ததால் வந்தது இந்த வரிகள்

சக்தி பாலா

நம் வாழ்வின் மற்றொரு மூன்றெழுத்து கவிதை அப்பா…..
அருமை சகோதரி

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

ஆம் சகோ. மடைகட்டிய அன்பு அப்பா.
மகிழ்ச்சி சகோ

Savitha.r

அப்பா கவிதை மிகமிக அருமை

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

மிக்க மகிழ்ச்சி சவிதா

தாமு

அப்பா கவிதை அருமை

கஸ்தூரி ஆண்டாள் சரவணன்

மகிழ்ச்சி தாமு