அஞ்சறைப்பெட்டி வைத்தியம் – உள்ளங்கையில் உடலுறுப்பு

0
249
ICF Parascience
தலைப்பை கண்டவுடன் வியப்பாக உள்ளதா ஆம் நமது உள்ளங்கையே நமது உடலுக்கான மருத்துவர் என்பதை எப்படி என்று பார்ப்போமா……
உள்ளங்கையில் நமது உடலுறுப்பு அமைந்த விதம் உண்மையில் வியப்பாகத்தான் உள்ளது….
கட்டை விரலையும் மற்ற நான்கு விரலையும் உற்று கவனியுங்கள். கட்டைவிரல் ஆகாயத்தை நோக்கியும் மற்ற விரல்கள் பூமியை நோக்கியும் இருக்கும் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மற்ற விரல்களில் மூன்று ரேகைகள் இருக்கும்.
அதில் ஆட்காட்டி விரலும் சுண்டு விரலும் நமது கைகள். இதன் அர்த்தம் தோள்மூட்டு, முழங்கை மூட்டி, மணிக்கட்டு,  மற்ற விரலான நடுவிரலும் மோதிரவிரலும் நமது கால்கள். தொடை பகுதி, முட்டி, கணுக்கால், என்பதை இந்த மூன்று ரேகைகள் நமது உடலுறுப்புடன் ஒற்றுமை கொண்டவை.
 ஆனால் கட்டை விரலில் இரண்டு ரேகை மட்டுமே இருக்கும் இதன் அர்த்தம் தலை ஒரு பிரிவாகவும் கழுத்து ஒரு பிரிவாகவும் இருப்பதே நமது உடலுக்கும் நமது உள்ளங்கைக்கும் உள்ள ஒற்றுமையை கண்டே நீங்களே புரிந்து கொள்வீர்கள்.
நமது உள்ளங்கையே நமது உடலுக்கு மருத்துவர் என்பதை நீங்களே இதனை உணர்ந்து கொள்ள , ஒரு சிறிய வைத்திய முறையை பார்ப்போம் வாருங்கள்.
கட்டைவிரலில் இரண்டு ரேகைகள் உள்ளன அல்லவா இதில் முதல் ரேகை தலைபகுதி இந்த. தலை பகுதியில் சைனஸ் நீர் தலைவலி உள்ளவர்கள் படத்தில் உள்ளது போல் ஒரே ஒரு மிளகை அல்லது கடுகை பேப்பர் டேப்பால் பேக் பண்ணவும் இரவு முழுவதும்  விதைகள் உயிரோட்டமாக இருப்பதால் காலை இந்த  சைனஸ் மற்றும்  தலைவலி நீங்கி புத்துணர்ச்சியோடு காணபடுவீர்கள் இந்த மருத்துவ முறையை  செய்து பார்த்து பலன் பெறுங்கள் …
வரும் வாரங்களில் நோயும் அதன் விவரமும் அதற்கான சிகிச்சை முறையை பார்ப்போம் அஞ்சறைப்பெட்டி விதை மருத்துவத்தை அனைவரும் பயன்படுத்தி நோயற்ற வாழ்வை வாழ வாழ்த்துக்கள்.

ஹீலர் சசிகலா