புதுப்பிக்கிறேன்

0
220

59058557

கடினமாயிருக்கிறது ..என்
சிறகு மனதை வெறுமையாக்கி
பொழியும் தூவான சாரலில்
எண்ணங்களைப் புதுப்பிக்கிறேன்  …

எரிக்குழம்பில் சிதறும்
அனல் சாரலில் சிறகுகளோ
கருகிட பறந்திட நினைக்கும்
சிறு பறவையாய் தவித்திடும்
மனதை புதுப்பிக்கிறேன்…

மணல் வீடுகளை கலைத்து
அரித்துச் செல்லும் பேரலைகளின்
கொண்ட்டாங்களில் கனவுகளைப்
புதுப்பிக்கிறேன்…

இருளை தின்றழிக்கும் நிலவின்
ஒளி சிதறலில் கறைபடிந்த
வண்ணங்களைப் புதுப்பிக்கிறேன்…

சிறு பறவையின் சிறகின் வலி
புதுப்பிப்பது கடினமாகிறதே…

எழுத்து – சசிகலா எத்திராஜ்