என்று தணியும் இந்த பாலியல் கொலைகள் ?

0
194
Abused woman
ஆணே நீயும் இச்சை அகற்று
  ஆழியும் பெண்ணே ஆண்டவனும் பெண்ணே

மனித இனம் தோன்றிய காலம் பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறைவாகவே இருந்தன என்றால் அது மிகையில்லை, பின்னர் பெண்ணை சதையாக எண்ணாமல் சக மனுஷியாக எண்ணி சகல துறைகளிலும் தமிழ் சமூகம் அவளுக்கு உறுதுணையக இருந்தது.

ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் யுக புரட்சி ஒன்று நிகழ்ந்தது ஆணுக்கு பெண் நிகர் என்று,  இன்றைய நவீன உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா துறைகளிலும் முன்னேறி கொண்டு உள்ளனர் ஆனால் இதே காலத்தில் தான் பதின்ம வயது கூட தாண்டாத குழந்தைகள் மீது வக்கிரம் பிடிச்ச ஆண் தனது பாலியல் இச்சைக்காக பலாத்காரம் பிரயோகிக்கிறான்.
திரைப்படம் தொடங்கி விளம்பரம் வரை பெண்களை பெரும்பாலும் போக பொருளாகவே பாவிக்கிறது சமூகம், தினம் பல பாலியல் குற்றம் இங்கே, 5 வயது குழந்தை முதல் வயது வேறுபாடற்று பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை ஏராளம்
இங்கே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றம் அந்த ஒரு தலைமுறையை அழிக்கும் பெரும் குற்றமாகும், ஆண்கள் சீரழிந்தாள் அது அவர்களோடு போகிறது ஆனால் ஒரு பெண் சீர் கெடும் போது ஒரு தலைமுறை அழிகிறது,
இங்கே எந்த குற்றமும் மன்னிக்கப்படலாம் ஆனால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றத்தை மட்டும் மன்னிப்பின்றி மரணதண்டனை கொடுக்க பட வேண்டும் அதுவே பாலியல் குற்றத்தை குறைக்கும் .
எழுத்து – சோழன்