பல தானிய சப்பாத்தி மாவு வீட்டிலேயே செய்யலாம்

0
214

Ranjani’s Space

Multi grain Flour (Multigrain Atta): Should You Make the Switch ...

‘Multi-grain’ என்று சொல்லிதான் நிறைய பொருள்கள் சந்தையில் விற்பனையாகின்றன. ஆனால், அதில் எல்லாம் பெயர் அளவில் மட்டுமே தானியங்கள் இருக்கும். நிறைவான தானியங்களுடன், பல சத்துக்கள் உள்ளடக்கிய பல தானிய சப்பாத்தி மாவு வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். 

தேவையான பொருட்கள்

கோதுமை – 3 கிலோ

சோளம் – 150 கிராம்

கம்பு – 150 கிராம்

ராகி – 150 கிராம்

கடலை பருப்பு – 150 கிராம்

சோயா – 150 கிராம்

ஓட்ஸ் – 150 கிராம்

செய்முறை

  • ஓட்ஸ் தவிர மற்றவை எல்லாம் சுத்தம் செய்து வெயிலில் 3-4 நாட்கள் காய வைத்து, அரைத்துக் கொள்ளவும். இதை வைத்து சப்பாத்தி செய்தால், மென்மையாக சுவையாக இருப்பதுடன் சத்தும் கூடும்.
  • இந்த மாவை தோசை பதத்திற்கு கரைத்து, ஒரு கரண்டி இட்லி/தோசை மாவு சேர்த்து 15 நிமிஷம் கழித்து, தோசை ஊத்தினால் மிருதுவான தோசை ரெடி.
  • இந்த பல தானிய சத்து மாவுடன், 1/4 பாகம் பஜ்ஜி மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,  கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து, போண்டா செய்தால் சுவையாக இருக்கும்.
  • இதன் செய்முறையை வீடியோ வடிவில் பார்க்க

Sivaranjani Rajesh

 

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments